உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி விருப்பம்

அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுக அரசுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என அமைச்சர் உதயநிதி கூறினார். சென்னை மாதவரம் பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது உதயநிதி பேசியதாவது: சசிகலா காலை பிடித்து முதல்வர் ஆன இ.பி.எஸ்., பின்னர் அவரது காலையே வாரிவிட்டார். அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். லோக்சபா தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுக அரசுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும். வட சென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.6,300 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்ததும் வீட்டுமனை பெற்றவர்களுக்கு பட்டா வழங்கப்படும். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த சென்னையும், திமுகவுக்கு ஓட்டளித்தது. கருணாநிதியை போலவே, சொன்னதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் முதல்வர் ஸ்டாலின். வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bellie Nanja Gowder
ஏப் 02, 2024 20:26

கட்ச தீவை தாரை வார்த்த கல்வியை பொது பட்டியலுக்கு போக வைத்த உங்கள் தாத்தா எப்போதோ மானில உரிமைகளை இந்திரா விடம் அடகு வைத்து விட்டார் நீ இங்கு உதார் விட்டுக்கொண்ட்டு திரிகிறாய்


பேசும் தமிழன்
ஏப் 02, 2024 18:59

மக்கள் உங்களுக்கு தான் பாடம் புகட்டுவார்கள் போல் தெரிகிறது..... அந்தளவுக்கு மக்கள் விடியாத ஆட்சி மீது கோபத்தில் இருக்கிறார்கள்..... கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்தது.... ஒரு உதாரணம்.


SRIPADAM
ஏப் 02, 2024 17:10

மக்கள் உங்களுக்கு முதலில் பாடம் புகட்ட தயாரா இருக்கிறார்கள்.


A.Muralidaran
ஏப் 02, 2024 16:22

ஆண்டவன் கூலி கொடுக்க ஆரம்பித்து விட்டார்


ஜஜ
ஏப் 02, 2024 16:17

எந்த உரிமையை அடகு வைத்தார்கள் அத சொல்லுங்க முதலில் எப்ப பாரு ஏதாவது பொய்யான தகவல்களை சொல்லி சொத்து இருக்கிறதே விட்டு விடுங்களே தமிழ்நாடு மக்கள் ஆவது நல்லா இருக்கட்டும்


Venkatasubramanian krishnamurthy
ஏப் 02, 2024 16:08

அடகு வைக்கக் கூடாது கச்சத்தீவு மாதிரி..... கனிமொழி இலங்கை சென்றபோது ராஜபக்சே இடமிருந்து கிஃப்ட் வாங்காமல் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே?


Kannan
ஏப் 02, 2024 15:54

ஆரம்ப காலத்தில் காங்கிரெஸ்ஸை பகைத்து தி மு க இப்போது காங்கிரஸ் கைக்கூலியாக இருந்து ஈழ தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்ததது தி மு க neet தேர்வுக்கு மத்தியில் காங்கிரஸ் எதிராக குரல் கொடுக்காமல் இருந்தது தி மு க


அரவழகன்
ஏப் 02, 2024 15:48

அமீர் வாயை திறந்தால் பாடம் படிக்கலாம்


raja
ஏப் 02, 2024 15:38

தமிழர்கள் தமிழன் வேறு திருட்டு திராவிடன் வேறு என்று உணர்ந்து விட்டார்கள் பாடம் புகட்ட தயாராய் இருக்கிறார்கள்


Kumar Kumzi
ஏப் 02, 2024 15:05

Aama antha Jafar Sadiq thambiya enga maraichu vachchika


மேலும் செய்திகள்









புதிய வீடியோ