உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் விரும்புகின்றனர்: தீவிர அரசியலுக்கு வருவேன்: ராபர்ட் வாத்ரா சொல்கிறார்

மக்கள் விரும்புகின்றனர்: தீவிர அரசியலுக்கு வருவேன்: ராபர்ட் வாத்ரா சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு தீவிர அரசியலுக்கு வருவேன்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களை சந்திக்கிறேன். அமேதி, ரேபரேலி, மொராதாபாத் என எங்கு சென்றாலும், நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அமேதி மற்றும் ரேபரேலி மக்களுடனான எனது உறவு வலிமையானது. சோனியா குடும்பத்தில் நானும் ஒருவன். இதனால், உலகம் முழுவதும் பலர் என்னை சந்திக்க விரும்புகின்றனர். நான் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா ஆகியோரை சந்தித்து உள்ளேன். சோனியா குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கும் போது, பெரிய சக்தியுடன் பொறுப்பும் வர வேண்டும். எந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். சாம் பிட்ரோடாவின் கருத்துகளை முற்றிலும் நான் நிராகரிக்கிறேன். நன்கு படித்த ஒருவர் இதனை எப்படி சொல்லலாம். அவர் ராஜிவுடன் நெருக்கமாக இருந்தவர். சிறிது பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். ராகுலும், பிரியங்காவும் கடும் முயற்சி செய்கின்றனர். ஆனால், அவரின் ஒரு கருத்தால், பா.ஜ., தேவையற்ற விவகாரத்தை எழுப்புவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.யாருக்கும் பதிலடி கொடுக்க அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை. நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அது ராஜ்யசபா மூலம் கூட இருக்கலாம். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வேன். அமேதி, ரேபரேலி, மொராாபாத் நகரங்களுக்கும் சென்று, மக்களின் ஆசி வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சில காலத்திற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.இவ்வாறு ராபர்ட் வாத்ரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

முருகன்
மே 10, 2024 14:24

எந்த மக்கள்? தேவையற்ற பேச்சு


Santhakumar Srinivasalu
மே 10, 2024 10:53

நாட்டை கூறு போட்டு விற்க கிளம்பீட்டார்!


sundar
மே 10, 2024 10:48

as such is the case U and your family leave politics and stay away from Bharat.


Rajasekar Jayaraman
மே 10, 2024 08:11

வா....


ராமகிருஷ்ணன்
மே 09, 2024 18:58

திட்டம் போட்டு தானே திருட்டு காந்தி குடும்பத்தில் நுழைந்தாய். ஆனால் அதற்குள் நாட்டின் நல்ல காலம் காங்கிரஸை ராகுல் அழித்து விடுவார்.


குமரி குருவி
மே 09, 2024 18:32

சேர்த்த பணத்தை காக்க அரசியல் போர்வை..


J.V. Iyer
மே 09, 2024 17:13

இவரு மக்கள்னு சொல்வது இவருடைய குடும்ப மக்கள் வேறு யார் சொல்வார்கள்


krishnamurthy
மே 09, 2024 16:34

என்ன சேவை செய்வார்? செய்த சேவையே போதும்


vidhu
மே 09, 2024 16:25

நீ வருவ ஆனா கட்சி இருக்கணுமே பா அதுவரை


R Kay
மே 09, 2024 16:12

மக்கள் விரும்புகின்றனரா? உங்களால், உங்கள் குடும்பத்தால் பயனடைந்தவர்கள் கூட்டுக் களவாணிகள் வேண்டுமானால் உங்கள் அரசியல் பிரவேசத்தை விரும்பலாம் மக்கள் உண்மையில் உங்கள் குடும்பத்தை வெறுக்கின்றனர் தேர்தலுக்கு தேர்தல் அவர்கள் சொல்லாமல் சொல்வதை இன்னுமா புரிந்துகொள்ள முடியவில்லை உங்களால்? அது சரி குடும்பம் முழுவதுமே புரிதல் இல்லாத கற்பனை உலகில் வாழும் மொக்கைகள் அரசியலும், நாற்காலிகளும், ஒரே ஒரு குடும்பத்தின் சொத்துக்களல்ல உரிமை கொண்டாட வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி