உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் மாளிகையை விட்டு வெளியேற போலீசாருக்கு உத்தரவு

கவர்னர் மாளிகையை விட்டு வெளியேற போலீசாருக்கு உத்தரவு

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் கவர்னர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை உடனடியாக வெளியேறும்படி, அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசுக்கும், கவர்னர் ஆனந்த போசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களுடன், கவர்னர் ஆனந்த போசை சந்திக்க, பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, சமீபத்தில் கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். இந்த சந்திப்புக்கு கவர்னர் அனுமதி அளித்திருந்த போதும், 144 தடை உத்தரவை காரணம் காட்டி, சுவேந்து அதிகாரி மற்றும் அவருடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எதன் அடிப்படையில் சுவேந்து அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மேற்கு வங்க அரசுக்கு கவர்னர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், கவர்னர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை உடனடியாக வெளியேறும்படி, கவர்னர் ஆனந்த போஸ் நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கவர்னர் மாளிகையில் போலீசாரின் சோதனைச்சாவடி இருந்த இடத்தை, பொது மக்களை சந்திக்கும் இடமாக மாற்ற கவர்னர் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி