உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொட்டும் மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

கொட்டும் மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் இருவழிகளிலும் தற்காலிகமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்கம் தாலுகாவில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவில் உள்ளது.இங்குள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை, ஜூன் 29ல் துவங்கியது. நுன்வான் - பஹல்கம் இடையேயான 48 கி.மீ., பாரம்பரிய வழி, கந்தேர்பல் வழியாக செல்லும் பல்டால் சாலை ஆகிய இரண்டு வழிகளில் அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லலாம்.இதுவரை நாடு முழுதும் இருந்து, 1.5 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்துஉள்ளனர். கடந்த ஆண்டு, 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வானிலை சீரானதும் மீண்டும் யாத்திரை துவங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை