உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி மருத்துவர் தற்கொலை உண்மை கண்டறியும் குழு அமைப்பு

பயிற்சி மருத்துவர் தற்கொலை உண்மை கண்டறியும் குழு அமைப்பு

புதுடில்லி:பயிற்சி மருத்துவரின் தற்கொலை குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவை டில்லி மருத்துவ கவுன்சில் அமைத்துள்ளது.பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய டில்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லுாரியில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லுாரியில் உள்ள தனது விடுதி அறையில் 25 வயது பயிற்சி மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கல்லுாரியில் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக டில்லி மருத்துவ கவுன்சில், செவ்வாய்க்கிழமை தானாக முன்வந்து விசாரணை நடத்தி, ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்தது.டில்லி மருத்துவ கவுன்சில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி