மேலும் செய்திகள்
இந்தியா வந்தார் ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி
1 hour(s) ago | 1
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா மனு
8 hour(s) ago
மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
8 hour(s) ago
பெங்களூரு: ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வலின் ஆபாச வீடியோ வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பலாத்கார வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் சில பெண்களுடன் ஆபாசமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.இதுதொடர்பாக ஹாசன் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா மீது, சில தினங்களுக்கு முன்பு, பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிரீத்தம் கவுடா மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. 'பிரீத்தம் கவுடாவிடம், சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்; ஆனால் விசாரணை முடிவதற்குள் அவரை கைது செய்யக்கூடாது' என, நீதிபதி தடைவிதித்து உத்தரவிட்டார்.இதற்கிடையில், பலாத்கார வழக்கில் சிக்கிய பிரஜ்வல், 15 சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சிம்களை பயன்படுத்தி யார் யாருக்கெல்லாம் மிரட்டல் விடுத்தார் என, போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
1 hour(s) ago | 1
8 hour(s) ago
8 hour(s) ago