உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவிக்கு தொல்லை பேராசிரியர் சஸ்பெண்ட்

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் சஸ்பெண்ட்

புதுடில்லி:மாணவி கொடுத்த பாலியல் புகாரையடுத்து, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை பேராசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்கலையின் விசாரணைக் குழு, பேராசிரியரிடம் விசாரணையைத் துவக்கியுள்ளது.புதுடில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் பி.ஏ., சமஸ்கிருதம் படிக்கும் மாணவி, பல்கலை நிர்வாகத்துக்கு 'இ - மெயில்' வாயிலாக அனுப்பிய புகாரில், 'பேராசிரியர் தன்னை அலுவலக அறைக்குள் தகாத முறையில் நடந்து கொண்டார்' என கூறியிருந்தார்.இதுகுறித்து விசாரிக்க பல்கலையின் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நிர்வாகம், பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை