உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள பண்ணை வீட்டில் பிரபல டாக்டர் தற்கொலை

கேரள பண்ணை வீட்டில் பிரபல டாக்டர் தற்கொலை

எர்ணாகுளம்,: கேரளாவில், 77 வயதான பிரபல சிறுநீரகவியல் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் பிரிவின் தலைவராக ஜார்ஜ் ஆபிரகாம் பணியாற்றி வந்தார்.இவர், தன் சகோதரருடன் கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள தன் பண்ணை வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். அன்றிரவு, சகோதரர் சென்றபின், பண்ணை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டில் சோதனையிட்டதில் டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. இதில் அவர், 'வயோதிகம் காரணமாக என் உடல் பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக, என் மருத்துவ பணி பாதிக்கப்படுவதை உணர்கிறேன். டாக்டராக பணியாற்றுவதில் முழு திருப்தி ஏற்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, டாக்டர் ஜார்ஜ் ஆபிராமிற்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும், தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினர் எந்த சந்தேகமும் இதுவரை எழுப்பவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற ஜார்ஜ் ஆபிரகாம், இதுவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

இளந்திரையன் வேலந்தாவளம்
மார் 05, 2025 04:10

தற்கொலைக்கான காரணம் நம்ப முடியலயே..


Matt P
மார் 05, 2025 01:22

தற்கொலை எண்ணம் யாருக்கும் வரலாம். ஏழை பணக்காரன் அரசியலவாதி கடவுள் இல்லை இருக்கு என்பவன் இல்லை என்பவன் என்று பார்ப்பதில்லை. கவனமாக பேசி,கவனமாக பேசுபவர்களிடம் பழகி கொள்ள வேண்டும். ஒத்து வரலைன்னா அது உடன்பிறந்தவனா இருந்தா கூட ஒதுக்கி வைத்து கொள்வது நல்லது. மனது அது பெரிய சக்தி.அதை கவனமாக கையாள வேண்டும். போதும் என்ற மனமே போன் செய்யும் மருந்து. முயற்சி செய்து கிடைத்ததை வைத்து திருப்தியாக வாழ வேண்டும். வயதானாலும் நல்லவை ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். அது சிந்தனை சிதறலை தடுக்கும்.


M. PALANIAPPAN, KERALA
மார் 04, 2025 14:42

தொழில் மீது அவர் கொண்ட அர்பணிப்புக்கு ஒரு பிக் salute வயதான காரணத்தால் முழு ஈடுபாடுடன் மருத்துவ தொழில் செய்ய முடியாத ஒரு ஆதங்கம்


saiprakash
மார் 04, 2025 14:37

சங்கிகளுக்கு எதற்க்கு எடுத்தாலும் திராவிட மாடலனா தூக்கமே வராது


ram
மார் 04, 2025 13:03

சர்ச்சில் எதாவது தேவை இல்லாத போதனைகள் இவருக்கு செய்து இருப்பார்கள் ஒரு வேலை அதனால் கூட யிருக்கலாம்.


aaruthirumalai
மார் 04, 2025 12:48

சாதாரணமானவர்களுக்கும் பிரச்சனை திறமையானவர்களுக்கும் பிரச்சனை என்னத்த சொல்ல


BALAJI Ramanathan
மார் 04, 2025 12:14

Not fit to be a Doctor.


Rangarajan
மார் 04, 2025 05:58

மிக மிக வருத்தமாக இருக்கிறது. மருத்துவர்களே இம்மாதிரியான முடிவு எடுப்பது வேதனையாக இருக்கிறது. ஏற்கனவே பிரபல இருதய நோய் நிபுணர் சீனியர் செரியன் இம்மாதிரியான முடிவு எடுத்தது வருத்தமான விஷயம்


Bye Pass
மார் 04, 2025 07:36

திராவிட டாக்டர் மருத்துவ சேவை செய்யாததால் திடகாத்திரமா காலம் கழித்தார்


சின்ன சுடலை ஈர வெங்காயம்
மார் 04, 2025 09:03

என்னது? டாக்டர் செர்பியன் தற்கொலை செய்து கொண்டாரா?


சமீபத்திய செய்தி