உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிராமின் என்பதில் பெருமை சமூக தளத்தில் கலக்கும் பதிவு

பிராமின் என்பதில் பெருமை சமூக தளத்தில் கலக்கும் பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளுங்கள்' என, பெங்களூரைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுராதா திவாரி கூறியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுராதா திவாரி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பிராமணர்கள் தங்களுடைய முழுப் பெயரைக் கூறுவதில்லை. பிராமணர்களை வில்லன்களாக, அரசியல்வாதிகளும், சில சமூக ஆர்வலர்களும் சித்தரிக்கின்றனர்.பிராமணர்கள் அரசின் எந்த உதவியையும் பெறுவதில்லை. அவர்களுக்கு கிடைப்பதும் இல்லை. இட ஒதுக்கீடு, இலவசங்கள் பெறுவதில்லை. சொந்த உழைப்பில் உயர்ந்து வருவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். அதனால், பிராமணர் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளுங்கள்.தலித், பழங்குடியினர், முஸ்லிம் என்று சொல்வதை பெருமையாக கருதும்போது, பிராமணர் என்று சொல்வதில் மட்டும் எதற்கு தயங்க வேண்டும். அரசியல்வாதிகளும், சமூக நீதியைக் காப்பாற்றுவதாக கூறுபவர்களும், பிராமணர்களை தவறாக சித்தரிக்கின்றனர்.பிராமணர் என்று கூறிய உடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எத்தனை பேர் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் இருந்து யார் மதவாதிகள் என்பது தெரிகிறது. பிராமணர்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை. யாரையும் நசுக்கப் பார்ப்பதில்லை. பிராமணர் என்று சொல்வதில் பெருமை கொள்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து, 'பிராமின் ஜீன்' எனப்படும் பிராமண மரபணு என்ற ஹேஸ்டேக், சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளது. அனுராதா திவாரியின் பதிவுகளை, 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 189 )

narayanansagmailcom
செப் 25, 2024 22:36

கடவுளை வணங்குபவர் மனிதரை மதிப்பவர் புலால் உண்ணாதவர் குடிக்காதவர் பொய் சொல்லாதவர் திருடாதவர் பிரான் மனைவியை ஏறிட்டு பார்க்காதவன் விலங்குகளை துன்புத்தாதவன் எல்லோரும் பிராமணர்களே என்று நான் சொல்ல வில்லை நம் புராணங்கள் இதிகாசங்கள் கூறுகின்றன. அதனால் பிராமணர்களுக்கு பதினான்கு உலகங்களிலும் பெருமை பெற்றவர் ஆகிறார். புற்கலத்தில் நம் அரசியல் வாதில் அவர்கள் சுய நலனுக்காக மக்களை பிரைன் வாஷ் செய்து இன்று அவர்கள் சிற்றின்பம் அனுபவிக்கிரர். இந்த பெண் அனுராதா அதை தான் கூறி இருக்கிறார். உலக மக்கள் அனைவரும் வாழ்க என்று நினைக்கும் நானும் ஓவர் நல்ல பிராமணனே. நன்றி தினமலர் வேறு பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை வெளி இடுவது இல்லை நன்றி


sundarsvpr
செப் 22, 2024 16:54

பிராமிணர்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவது ஒன்றும் கடினம் இல்லை. வேதம் படித்தவர்கள் திவ்யபிரபந்தம் 64 நாயன்மார்கள் பாட்டுக்களை ஓதுவார்கள் இவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் அப்பிராமிணர்கள் என்று கூறிவிட்டால் போதும். ஏற்ற தாழ்வு குறைந்துவிடும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 08:03

இதை சொன்னால் கூட நம்பமாட்டார்கள் போலிருக்கே. கலாச்சாரம் கட்டவிழ்த்து ஓடுதே..


Krishna Gurumoorthy
செப் 19, 2024 10:40

எல்லா ஜாதியினரும் பெருமை வாய்ந்த சந்ததிகள் ஏற்றத்தாழ்வு கிடையாது


Nachiar
செப் 16, 2024 17:57

நான் பிராமணர் இல்லை. பிராமணர்களே தலை நிமிர்ந்து உரத்து சொலுன்கள் நீங்கள் பிராமணர்கள் என்று. காரணம் இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் அறிவுக்கும் கல்வித் துறைக்கும் நீங்கள் அழித்த அழித்துக் கொண்டிருக்கிற பங்கு மிக அதிகம். கணிதம் மொழி சட்டம் விஞ்ஞானம் இசை இப்படி எந்த துறையில் உங்கள் அளப்பரிய பங்கு இல்லை. மற்ற எல்லா சமூகத்தையும் விட உங்கள் பங்கு மிக அதிகம். உங்கள் சமூகத்தவர் ஆசிரியர்களாக இருந்த பொழுது பல் விதமான சமூக மாணவர்களை வெற்றிகரமாக உருவாக்கினீர்கள். அறிஞர் அம்பேத்கார் உங்கள் சமூகத்தில் ஒருவரால் பயிற்றுவிக்கப் பட்டவர்தாம். இந்து சமய பண்பாட்டு வளர்ச்சிக்கும் அப்படியே. இன்று உங்கள் சமூகத்தவர் உலகின் பல நாடுகளிலும் அறிவுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பிற இந்திய சமூகத்தினரை விட அதிக பங்களித்துக் கொண்டுளீர்கள். ஒரு காலத்தில் படித்த உங்களை போன்றோர் மட்டும் மேட்க்கு நாடுகளுக்கு சென்ற காலங்களில் இந்துக்கள் அறிவுக்கும் உழைப்புக்கும் பண்பாடு ஒழுக்கத்துக்கும் சான்றாக வாழ்ந்து காட்டிக் கொண்டு இருந்தீரிகள். இந்துக்கள் என்றால் பயமின்றி அவர்களை மேர்ட்க்கு நாடுகள் வரவேற்றன. இன்று நடப்பு மாறிவிட்டது. இந்தியாவிலும் சரி பிற நாடுகளிலும் சரி கிரிமினல் குற்றங்களில் தண்டனை செய்தவர்களின் புள்ளி விபரத்தை எடுத்தால் ப்ராமண சமூகம் தான் மித குறைந்த விகிதத்தில் இருப்பீர்கள். அதனால் நீங்கள் உரக்க சொல்லுங்கள் நீங்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று. ப்ராமண சமூக பண்பாடு பழக்க வழக்கங்களுடன் வாழும் பிரமன சமூகம் நீடுழி வாழ்க. ஜெய் ஹிந்


iyer N.A (S D C)
செப் 12, 2024 06:53

ஹரி ஓம் நான் இந்த கரூத்தை வரவேற்கிறேன் வாழ்க அனுராதா திவாரி இன் இந்த விச்ரங்கள்


krishnamurthy
செப் 09, 2024 10:52

சபாஷ். நானும் ப்ராஹ்மணனே


sundarsvpr
செப் 06, 2024 17:01

சிறிய அணு பெரிய நாசம் பண்ணும் சக்தியுள்ளது. பெரிய அனுகூலங்களை வழங்கும் கொடை தன்மையும் கொண்டது. வேதம் படித்தவர்கள் பிராமணர்கள். வேதம் என்ற படிப்பு விற்பனை அல்ல. தீங்கு செய்யாமல் எல்லா உயிர்களிடம் அன்பை காட்டுபவன் உண்மையான அந்தணர். இயற்கையை சுத்தமாக கருதுபவன் வைத்து இருப்பவன் மட்டும்தான் அந்தணன். பிதாமகர் பீஷ்மர் விஸ்வாமித்திரர் கசாப்பு கடைக்காரன் போன்றோர் அந்தணர்தான் வாழ்க்கை நெறியில் தூய்மை உள்ளவன் பிராமிணன். உலகில் எல்லா நாட்டிலும் உள்ளனர். வேதம் படித்து அதன்படி வாழபவன் தான் அந்தணர். வேதத்திற்கு என்ன டெபினிஷன்


RAJ
செப் 04, 2024 12:34

ஐயா , சாதி சாதி இல்லை ஆனால் அரசாங்கத்தில் சாதி சான்று கொடுக்கிறாங்க அதிலும் ஐய்யர்க்கு சாதி சான்று கொடுக்க மாற்றங்க என்னவோ நடக்குது மர்மமா இருக்குது ஐயர் உயர்ந்தவர்கள் என்றும் வசதி படைத்தவர்கள் என்றும் சொல்றாங்க வெறும் கோவில் பூஜா பண்ணிட்டு அத வச்சு கூடும் நடத்தும் வயதான குருக்கள் இருக்காங்க தெரியுமா அவங்க இதும் கேக்குறது இல்ல அரசாங்கத்து கிட்ட ஆண்டவன் கிட்ட மட்டும் கேக்கிறாங்க


Ganapathy
செப் 04, 2024 10:56

அப்பட்டமான உண்மை.


சமீபத்திய செய்தி