உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நெகிழ்ச்சி

ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ''ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்; அதுவே என்னை வழிநடத்துகிறது,'' என்று குறிப்பிட்டார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டுக்கு, 4ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவருடைய மனைவி அக் ஷதா மூர்த்தி நேற்று முன்தினம் சென்றனர். கோவிலில் பூஜைகள், வழிபாடுகளில் அவர்கள் பங்கேற்றனர்.ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் நாராயண மூர்த்தி, சமூக ஆர்வலர் சுதா மூர்த்தியின் மகள் தான், அக் ஷதா மூர்த்தி. பழமைவாத கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹிந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார். கடந்தாண்டு ஜி - 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தபோதும், டில்லியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு தம்பதி சென்று வந்தனர்.லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற ரிஷி சுனக், அங்கிருந்த மக்களிடையே பேசியதாவது:நான் ஒரு ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன். என் மத நம்பிக்கையில் உறுதியாக உள்ளேன். அது என் வாழ்க்கையில் எனக்கு உந்துதலாக இருந்து வந்துள்ளது. என் பெற்றோர் எனக்கு ஹிந்து மதத்தின் பெருமைகளை ஊட்டி வளர்த்தனர்.பார்லிமென்ட் எம்.பி.,யாக பகவத் கீதையை வைத்து பதவியேற்றேன். என் மதம் மற்றும் நம்பிக்கை, நம் கடமையை செய்யும்படி வலியுறுத்துகிறது. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று கீதை கூறுகிறது. அதுதான், என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். எந்த எதிர்ப்புகள் வந்தாலும், நல்லது செய்வதில் இருந்து விலக மாட்டேன்.ஹிந்து தர்மம், பொது வாழ்க்கையில் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளது. இதை, என் மகள்களுக்கும் கற்றுத் தருகிறேன். என் பெற்றோர், என் மாமியார் செய்து வரும் பணிகள் எனக்கு முன்மாதிரியாக உள்ளன.கடந்த சில நாட்களாக, என் மதத்தின் அடிப்படையின் சிலர் விமர்சித்து வருகின்றனர். மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு பெருமை. அதுவே, இந்த நாட்டின் சிறப்புமாகும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
ஜூலை 02, 2024 07:15

ஆங்கிலேயர்கள் சாதி மதம் பார்க்காமல் இந்தியரை இந்துவாக உள்ளவரை பிரதமராக ஏற்றுள்ளனர். இந்த நாட்டில் இந்து மதத்தின் பெயரால் சாதி மத உணர்வுகளை தூண்டி அதில் குளிர் காய்ந்து கொண்டுள்ளனர்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 01, 2024 04:28

இதை கொஞ்சம், திருட்டு திராவிட அரசியல் வியாதிகளுக்கு மொழிபெயர்த்து சொல்லவும், இங்கே சில கழிசடைகள் வோட் பிச்சைக்காக அந்நிய மதத்தினரின் காலை நக்கிக்கொண்டு ஹிந்து மதத்த அளிக்கும் செயலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி