உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் பில்டர்கள் மூலமாக பிளாட் விற்க பி.டி.ஏ., திட்டம்

தனியார் பில்டர்கள் மூலமாக பிளாட் விற்க பி.டி.ஏ., திட்டம்

பெங்களூரு: பி.டி.ஏ., கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளில், விற்பனை ஆகாமல் உள்ள பிளாட்டுகளை தனியார் பில்டர்கள் மூலமாக விற்க ஆலோசிக்கிறது.இது தொடர்பாக, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணைய தலைவர் ஹாரிஸ் கூறியதாவது:பெங்களூரின் வலகேரஹள்ளி, ஆலுார், குஞ்சூர், கனமினிகே, திப்பசந்திரா, கோனதாசனபுரா உட்பட பல இடங்களில் பி.டி.ஏ., அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டின. இவற்றில் 3,586 பிளாட்டுகள் விற்பனையாகவில்லை.தனியார் பிளாட்டுகளுடன் ஒப்பிட்டால், பி.டி.ஏ., பிளாட்டுகள் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. நடுத்தர வர்க்கத்து மக்களின் கைக்கு எட்டும் வகையில் பி.டி.ஏ., பணியாற்றுகிறது. குடியிருக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. ஆனால் பிளாட்டுகளை வாங்க, பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை.இதற்கு முன் ஒரே முறை, 10க்கும் மேற்பட்ட பிளாட்டுகளை வாங்கினால், விலையில் 10 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டது. பிளாட் விற்பனை மேளா நடத்தி, மக்களை ஈர்க்க முயற்சித்தது. இந்த முயற்சி பலனளிக்கவில்லை.இதனால் பி.டி.ஏ.,வுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தனியார் பில்டர்கள் மூலமாக, பிளாட்டுகளை விற்க ஆலோசிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !