உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாள் முன்பே வினாத்தாள் கசிவு: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

ஒரு நாள் முன்பே வினாத்தாள் கசிவு: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக, அதாவது மே 4ம் தேதியே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அதிருப்தி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவாக, 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின.இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலையிலான, அமர்வில், இன்று(ஜூலை 22) இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், நீட் தேர்வுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என வாதிடப்பட்டது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக, அதாவது மே 4ம் தேதியே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். கைதான அமித் ஆனந்த் என்பவரின் வாக்குமூலத்தின் படி, மே 4ம் தேதி இரவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடந்திருக்கலாம். பிறகு எதற்காக காலதாமதம் எனக் கூறி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது?. எத்தனை மையங்களில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது?. ராஜஸ்தான், குஜராத்தில் தேர்வு முறைகேடு நடந்ததை வைத்து எப்படி ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்ய முடியும். தற்போதைய தரவுகள் அடிப்படையில் ஹசாரிபாக், பாட்னா ஆகிய 2 இடங்களில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது. வினாத்தாள் நாடு முழுவதும் கசிந்ததா?. நீட் தேர்வில் நடந்துள்ள ஒரு சில முறைகேடுகளை களைய உத்தரவிட நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

காஷ்மீர் கவுல் பிரமணன்.
ஜூலை 22, 2024 19:25

நீட் வினாதாள் கசியவிட்டவர்களை கைதுசெய்தால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவதாக கூறி உடனே ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தன்னுடைய நேர்மையை நிலைநாட்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 22, 2024 17:17

///ராஜஸ்தான், குஜராத்தில் தேர்வு முறைகேடு நடந்ததை/..? இதுல வேற தமிழன்களை திருடென்னு கூவுதுங்க...?


D.Ambujavalli
ஜூலை 22, 2024 16:35

இன்று நீட் மட்டும் கோர்ட் படி ஏறியிருக்கிறது மற்ற பல தேர்வுகளிலும் இத்தனையும் நடக்கிறது தேர்வு வினாக்கள் தயாரிப்பிலிருந்தே இவ்வகை முறைகேடுகள் நடக்கின்றன மக்களுக்கும் காசை வீசியெறிந்து ‘by hook or crook ‘ கல்லூரி சீட், பணிநியமனம் பெற்றால் போதும் என்ற நிலையில் , தேர்தல் முதல் contract நூறுநாள் வேலை எங்கும் விரிந்து பரந்து கோலோச்சும் ஊழல்களை உச்ச நீதிமன்றம் கிளற ஆரம்பித்தால், நாட்டில் ஊருக்கு ஆயிரம் சிறைச்சாலைகள் நிறுவ வேண்டி வரும்


Ethiraj
ஜூலை 22, 2024 20:03

It is there in TN also


Mahalingam Subaramani
ஜூலை 22, 2024 16:11

இதனால் பரம ஏழைகள் மற்றும் மிகவும் பின்தங்கியவர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்


Rengaraj
ஜூலை 22, 2024 16:04

நீட் விவகாரத்தில் கசிவு நிகழ்ந்தது உண்மையென்று வைத்துக்கொண்டாலும் அதற்கு தண்டனை .தரப்பட்டதா என்று விளக்க வேண்டும். கசிய விட்ட ஆளுக்கு தண்டனை தந்தால் மட்டும் போதாது, துணைபோன அத்தனை அரசு அதிகாரிகளையும் டிஸ்மிஸ் பண்ண வேண்டும். அந்த கேள்வித்தாளினை கொண்டு பரீட்சை எழுதிய மாணவர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பரிட்சையும் எழுத முடியாத மாதிரி பண்ணவேண்டும். அவன் எந்த வேலைக்கும் செல்லமுடியாத மாதிரி தண்டனை தர வேண்டும். கடுமையான தண்டனைகள் மட்டுமே முறைகேடுகள் நடக்காமல் தடுக்க இயலும். உச்ச நீதிமன்றம் இந்த நீட் விவகாரத்தில் இத்தனை கேள்வி கேட்கிறதே இது ஒரு வருஷத்தில் நடக்கும் எக்ஸாம்.. பரீட்சை நடைமுறைகளை எப்படியும் சரிபண்ணலாம். வோட்டுக்கு பணம் , பரிசு தந்து ஜெயித்து எம்பி ஆன மக்கள் பிரதிநிதி ஐந்து வருஷம் பாராளுமன்றத்தில் இருப்பாரே அதற்கு என்ன செய்யப்போகிறது ? அதை எப்படி சரிசெய்வது ? அதை கேள்வி கேட்கலாமே ? அவர் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வாங்குவாரே அந்த எம்பிக்கு என்ன தண்டனை தரப்போகிறது ? உச்ச நீதிமன்றம் இதை எங்காவது பேசியிருக்கிறதா ?? தேர்தல் கமிஷன்க்கு வேண்டிய அதிகாரத்தை ஏன் வழங்க மறுக்கிறது ? எந்த அரசியல்வாதியாவது இதை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ பேசியிருக்கின்றனரா ? தமிழ்நாட்டில் வோட்டுக்கு பணப்பட்டுவாடா நடந்ததே இல்லையா ? இது தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா ? முதலில் பணம் பட்டுவாடா பண்ணியதற்கோ அல்லது பணம் வாங்கியதற்கோ தேர்தல் கமிஷன் சம்பந்தப்பட்ட ஆட்கள் மீது நோட்டீஸ் விட்டதா ? தொகுதிக்கு பத்து பேர் வீதம் வோட்டுக்கு பணம் வாங்கின வாக்காளர்


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 15:50

மக்களிடையே நேர்மை இருந்திருந்தால் கசிந்த வினாத்தாளை வாங்கியிருக்க மாட்டார்களே.திருட்டுப்பொருளை வாங்குவதும் பெரும் குற்றம்தான்.


SRIRAMA ANU
ஜூலை 22, 2024 17:32

பதில் அளிக்கும் போது மனசாட்சியுடன் பதில் அளிக்கவும்.


SRIRAMA ANU
ஜூலை 22, 2024 17:33

இவ்வளவு பெரிய தேர்வை ஒழுங்காக நடத்த வக்கில்லை. இதை கசிய விட்டவர்கள் யார்? அதை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு குறுக்கு வழி தெரிந்தால் அதைத்தானே முயற்சிப்பீர்கள். குறுக்கு வழி இல்லை என்றால் எப்படி முயற்சிப்பார்கள் குறுக்கு வழியை ஏற்படுத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்


SRIRAMA ANU
ஜூலை 22, 2024 14:54

மத்திய அமைச்சர் கசி வில்லை என்கிறார் சுப்ரீம் கோர்ட் கசிந்து இருக்கிறது என்கிறது என்னதான் நடக்கிறது. உங்களுக்கென்று மனசாட்சியே இல்லையா? இதைத் தவிர வேறு என்ன உங்களை கேட்பது என்று தெரியவில்லை


vadivelu
ஜூலை 22, 2024 14:42

அது சரி அப்படி கசிய விட்டவர்களுக்கு என்ன தண்டனை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை