உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலும், கமலாவும் பேசிக்கொள்ளவில்லை: துணை அதிபர் அலுவலகம் மறுப்பு

ராகுலும், கமலாவும் பேசிக்கொள்ளவில்லை: துணை அதிபர் அலுவலகம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: எதிர்கட்சி தலைவர் ராகுலுடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் பேச வில்லை என அமெரிக்க துணை அதிபர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.,மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பேற்றார் ராகுல்.அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபைடன் , குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். தற்போதைய துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்-ம் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.இதனிடையே கடந்த சிலதினங்களுக்கு முன்னர் எதிர்கட்சிதலைவர் ராகுல் உடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இருப்பினும் இருதரப்பிலும் பேசப்பட்ட விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது.இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் ராகுல் உடன் துணை அதிபர் கமலா எந்த வித தொலை பேசி உரையாடலையும் நடத்தவில்லை .இது தவறான செய்தியாகும் என மறுப்பு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

VIDHURAN
ஜூலை 15, 2024 16:56

சரி அப்படியே பேசட்டும் கமலா விக்கு இந்தியாவில் VOTE இல்லை ராகுலுக்கு அமெரிக்காவில் VOTE இல்லை .


ஸ்ரீ
ஜூலை 15, 2024 07:36

எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு..


hariharan
ஜூலை 14, 2024 23:16

சொரியாரை யுனஸ்கோ கவுரவித்ததது, திருமுருகன் காந்தி ஐநாவில் ஈழத்தமிழர்களைப்பற்றி பேசியது போன்ற புருடா. திராவிட மாடலின் காப்பி.


Kasimani Baskaran
ஜூலை 14, 2024 21:45

காங்கிரசுக்கு ஐடி தொழில்நுணுக்கம் என்ற பெயரில் இது போல பொய் செய்திகளை அடிமை ஊடகங்கள் மூலம் அள்ளி விடுவது தீம்காவின் கைங்கர்யம்...


thanjai NRS krish
ஜூலை 14, 2024 21:28

அமெரிக்க துணை அதிபரோடு உரை யாடுமளவுக்கு இந்த நபருக்கு தகுதி இருப்பது போல் தெரியவில்லை .


N Srinivasan
ஜூலை 14, 2024 21:06

சரியான சில்லறை பய மாதிரி இருக்கிறது


வாய்மையே வெல்லும்
ஜூலை 14, 2024 21:02

மாடல் அரசும் இப்படி தான் நடக்காத விஷயத்தை நடந்தது போல லந்து பண்ணும். நீங்களும் ஆரம்பிச்சு விட்டேர்களா மகா பிரபு.. இனிமே கமலிடம் இருந்த உலக நாயகன் பட்டம் பப்புவிடம் கைமாற போகிறது என்பதை இவ்வுலகத்திற்கு சொல்ல ஆசை படுகிறோம் .


sridhar
ஜூலை 14, 2024 20:42

சிரிப்பதை பார்த்தால் பேசி இருப்பார் என்று தான் தோன்றுகிறது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி