உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு

புதுடில்லி, காங்., லோக்சபா எம்.பி.,க்களின் கூட்டம் டில்லியில் நேற்றிரவு நடந்தது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக, காங்கிரஸ் எம்.பி., ராகுலை அக்கட்சியினர் ஒருமனதாக தேர்வு செய்து அறிவித்தனர். இதற்கான கடிதத்தை இடைக்கால சபாநாயகரிடம் கட்சித் தலைமை நேற்றிரவு அளித்தது. இந்த தகவலை காங்., பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்தார். கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் குறைந்த தொகுதி களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி, காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 99 தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
ஜூன் 26, 2024 08:02

அரசியல் சர்க்கஸில், முக்கியமான நபர் பிரவேசம், ஆரவாரம், மற்றும் கூச்சல் குழப்பத்திற்கு குறைவிருக்காது. ராவுல் வின்சியின் ஆக்க பூர்வமான? செயல்களை எதிர் பார்க்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை