உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு மாத சம்பளம் ராகுல் நன்கொடை

ஒரு மாத சம்பளம் ராகுல் நன்கொடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மறுவாழ்வுப் பணிக்காக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தன் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 78க்கும் அதிகமானோர் மாயமாகினர். இந்த நிலச்சரிவில் உறவினர்களை இழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்களுக்கு, 100 வீடுகளை கட்டித்தர உள்ளதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக மாநில காங்., நிதி திரட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தன் ஒரு மாத சம்பளமான 2.3 லட்சம் ரூபாயை, வயநாடு மறுவாழ்வுப் பணிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். பொதுமக்கள் நிதி உதவி அளிப்பதற்காக, 'ஸ்டேன்ட் வித் வயநாடு - ஐ.என்.சி.,' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
செப் 05, 2024 12:28

இதுதானா உங்க டக்கு.


அனந்தராமன்
செப் 05, 2024 11:01

கேவலமான விளம்பரம். கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ள பணத்தைப் பதுக்கி ஏதோ பெரிய தியாகி போல மாதச் சம்பள தானம் செய்வதை விட,


பேசும் தமிழன்
செப் 05, 2024 08:03

அய்யோ பாவம்.... சம்பளத்தைக் கொடுத்து விட்டால் வேறு.. இந்த மாதம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்.... என்னப்பா கலர் கலரா ரீல் விடுறீங்க ???


பேசும் தமிழன்
செப் 05, 2024 08:02

பப்பு.... உங்கள் குடும்பம் இத்தாலியில் பதுக்கி வைத்துள்ள பணத்தில் இருந்து அள்ளி கொடுக்க வேண்டாம்.... கிள்ளி கொடுத்தாலும் போதும்.... அதுவே பெரிய தொகையாக இருக்கும்.... ஆனால் அதற்க்கு மனது வைத்தால் வேண்டும்.....இப்படி ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறேன் என்று சீன் போட வேண்டாம்.


கண்ணன்
செப் 05, 2024 07:08

இது எமது வரிப்பணம் இது அந்தக் கூமுட்டைக்குத் தெரியுமா?


பேசும் தமிழன்
செப் 05, 2024 09:03

தெரிந்தால்.... அந்தளவுக்கு அறிவு இருந்தால்... அவர் எதற்க்கு பப்பு என்று பெயர் எடுக்க போகிறார் ???


Indhuindian
செப் 05, 2024 06:58

அய்யய்யோ அப்போ இந்த மாசம் பூவாவுக்கு என்ன பண்ணுவார். இப்படியெல்லாம் உடம்பை வருத்திக்கொண்டு தேசத்தொண்டு.


Kasimani Baskaran
செப் 05, 2024 05:43

நேஷனல் ஹெரால்டை லவட்டி சம்பாதித்ததில் ஒரு பகுதியை கொடுத்து இருந்தால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கலாம். ஆனால் கொடுத்தது என்னவோ ஒருநாள் ஷூட்டிங் நடத்த சிப்பந்திகளுக்கு கொடுக்கும் தொகை. திராவிட கஞ்சத்தனத்தை மிஞ்சிய கஞ்சத்தனம்.


A Viswanathan
செப் 05, 2024 08:27

ஒரு மாத சம்பளமா.உங்கள் குடும்பம் எங்கள் நாட்டிலிருந்து கொள்ளை அடித்த பணத்திலிருந்து 1% கொடுங்கள் போதும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை