உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதுாறு வழக்கில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.1,000 அபராதம்

அவதுாறு வழக்கில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.1,000 அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில் ஆஜராகாமல், தொடர்ந்து விலக்கு அளிக்கக்கோரியதால், காங்., - எம்.பி. ராகுலுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2018ல் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி., ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி அவதுாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக பா.ஜ., பிரமுகர் பிரதாப் காதியார், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக, 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அவதுாறு வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கில் கடந்த பிப்ரவரியில் ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத வாரன்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது, தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ராகுல் மனு தாக்கல் செய்தார்.அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்ததுடன் மார்ச் 27ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அனில்குமார் சவுத்ரி, விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இதற்கிடையே, வழக்கின் விசாரணையின்போது ராகுல் தரப்பில் தொடர்ந்து ஆஜராகாமல் விலக்கு அளிக்கக் கோரியதால், அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த அபராத தொகையை, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பணிகள் கமிஷனிடம் இரு வாரத்திற்குள் செலுத்த தவறினால், ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Abc
மே 20, 2024 00:43

அய்யோ எவ்ளோ பெரிய தொகைய அவரால் எப்படி கட்ட முடியும்..


பேசும் தமிழன்
மே 19, 2024 12:26

அவர் பேசுவது எல்லாமே அவதூறு தான்.... அப்படி பார்த்தால்.... அவருக்கு தினம் தினம் அபராதம் விதிக்க வேண்டும்.....திருந்தாத ஜென்மம்...


M Ramachandran
மே 19, 2024 10:08

நீதி மன்றங்களுக்கு ராகுல் மதிப்பு தெரியாமல் பிஸாத்து காசை அபராதம் விதித்துள்ளார் யேழைகளுக்கு கொடுக்கும் தண்டனை போல் கொடுத்து விட்டார்


Kasimani Baskaran
மே 19, 2024 06:40

ஐக்கிய நாடுகள் சபை வரைக்கூட சென்று மேல் முறையீடு செய்து தப்பிக்க முயல்வார் விடக்கூடாது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ