உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் ரயில் கோச் ரெஸ்டாரென்ட் பயணியரிடம் சிறப்பான வரவேற்பு

பெங்களூரில் ரயில் கோச் ரெஸ்டாரென்ட் பயணியரிடம் சிறப்பான வரவேற்பு

பெங்களூரு: பெங்களூரின் இரண்டு ரயில் நிலையங்களில் 'ரயில் கோச் ரெஸ்டாரென்ட்' துவக்கப்பட்டுள்ளது. இவை பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளன.பெங்களூரின் கே.எஸ்.ஆர்., எனும் கிராந்தி வீரா சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம், பையப்பனஹள்ளியின் எஸ்.எம்.வி.டி., எனும் சர் விஸ்வேஸ்வரய்யா முனையம் ஆகிய இரு ரயில் நிலையங்களில் 'ரயில் கோச் ரெஸ்டாரென்ட்' திறக்கப்பட்டுள்ளன.கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தின் ரெஸ்டாரென்ட் நிர்வகிப்பு பொறுப்பை, ஓம் இண்டஸ்ட்ரிஸ், எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தின் ரெஸ்டாரென்ட் நிர்வகிப்பு பொறுப்பை, கவுரவ் என்டர் பிரைசஸ் நிறுவனம் பெற்றுள்ளன.

சைவம், அசைவம்

ரயில் கோச் ரெஸ்டாரென்டில், 40 இருக்கைகள்; வெளிப்புறத்தில் 30 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சைவம், அசைவம் என, இரண்டு வகையான உணவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தற்போது சைவ உணவு மட்டும் வழங்கப் படுகிறது.நாட்டின் தென் மாநிலங்கள், வட மாநிலங்களின் உணவுகள் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளின் தின்பண்டங்கள் விற்கப்படும். தினமும் 24 மணி நேரமும் ரெஸ்டாரென்டுகள் இயங்கும். ரயில் பெட்டியின் சுவர்கள் மீது மாநிலத்தின் கலை வடிவங்கள், ரயில்வே வரலாற்றை விவரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தென் மேற்கு ரயில்வேதுறை பொது தொடர்பு அதிகாரி திரிநேத்ரா கூறியதாவது:ரயில்வேயில் 15 ஆண்டுகள் பயன்படுத்திய ரயில் பெட்டிகளை, காயலான் கடைகளுக்கு போடுவதற்கு பதில், ரெஸ்டாரென்டுகளாக மாற்ற தென்மேற்கு ரயில்வே முடிவு செய்தது. முதற்கட்டமாக ஹூப்பள்ளியில் ரயில் கோச் ரெஸ்டாரென்ட் துவக்கப்பட்டது. தற்போது பெங்களூரின், கே.எஸ்.ஆர்., ரயில் நிலையம், எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில், ரயில் கோச் ரெஸ்டாரென்ட் திறக்கப்பட்டுள்ளன.

ஐந்தாண்டுகள் ஒப்பந்தம்

இரண்டு ரெஸ்டாரென்டுகளின் நிர்வகிப்பு பொறுப்பு, தனியார் நிறுவனங்களிடம் ஐந்தாண்டுகள் ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வேக்கு ஆண்டுதோறும், 7.54 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கே.எஸ்.ஆர்., ரயில் நிலைய நுழைவாயில் முன் திறக்கப்பட்ட, ரெஸ்டாரென்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு தினமும், இரண்டு லட்சம் பயணியர் வந்து செல்கின்றனர். எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில், பயணியர் எண்ணிக்கை 6-0,000 ஆக உள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில், ரயில் கோச் ரெஸ்டாரென்டுகள் திறக்கப்பட்டதால், அதிகமாக விளம்பரம் செய்ய முடியவில்லை. வரும் நாட்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்தால், இடம் போதாது என, தோன்றுகிறது.பெங்களூரின் இரண்டு ரெஸ்டாரென்டுகள், வெற்றிகரமாக செயல்பட்டால் கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தின், இரண்டாவது நுழைவாயில் அருகிலும், ரயில் கோச் ரெஸ்டாரென்ட் துவக்கப்படும். யஷ்வந்த்பூர், கன்டோன்மென்ட் உட்பட தேவையான ரயில் நிலையங்களில், ரெஸ்டாரென்டுகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ