உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்களை சந்தித்த ராஜ்நாத்: இனிப்பு ஊட்டிவிட்டு உற்சாகம்

சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்களை சந்தித்த ராஜ்நாத்: இனிப்பு ஊட்டிவிட்டு உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லடாக்: உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அவர் கடும் பனிப்பொழிவிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார்.இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ள, அதிக உயரமுடைய செங்குத்தான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களை இன்று (ஏப்ரல் 22) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.அப்போது பனிப்பொழிவிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் குரூப் புகைப்படம் எடுத்து கொண்டார்.

பாராட்டு

இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகவும் சவாலான சூழ்நிலையில் நமது தேசத்தைக் காக்கும் துணிச்சலான ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினேன்.ராணுவ வீரர்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். சியாச்சின் பனிமலையில் நமது வீரர்களின் துணிச்சலான செயல்கள் எதிர்கால சந்ததியினருக்கு எப்போதும் ஊக்கமளிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி