உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வெளிநாட்டு அமைப்புக்கு தொடர்பா?

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வெளிநாட்டு அமைப்புக்கு தொடர்பா?

பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், 'கிரிப்டோ கரன்சி' வாயிலாக இதற்கான பணம் அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்றும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில், கடந்த மாதம் 1ம் தேதி வெடிகுண்டு வெடித்தது. இதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கர வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என, உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வருகின்றனர். ஷிவமொகாவில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கடந்த 2020ல் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்ட வழக்கில், இவர்கள் பெயர் மீண்டும் அடிபடத் துவங்கியது. அதில், ஒருவரான ஷாரிக் என்பவர் ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர்.பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்கள் திடீரென குண்டு வைத்த சம்பவத்தை பார்க்கும்போது, அவர்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த இடைப்பட்ட காலத்தில், கிரிப்டோ கரன்சி வாயிலாக அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நிதி அளித்த வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. வழக்கமாக கோவில் போன்ற இடங்களில் குண்டு வைக்கும் வழக்கம் உள்ள இவர்கள், இம்முறை உணவகத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். குறிப்பாக, மென்பொறி நிறுவன ஊழியர்கள் மதிய உணவு சாப்பிடும் நேரத்தை தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

சதி திட்டம்

முதலாவது, உணவகத்தில் குண்டு வைப்பது அவர்களுக்கு எளிதாக இருந்துள்ளது. இரண்டாவது, இந்தியாவில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை பன்னாட்டு நிறுவனங்கள் மனதில் ஆழமாக விதைப்பது.நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களையும் குற்றவாளிகள் பலமுறை சுற்றி ஆய்வு செய்த பின், ராமேஸ்வரம் கபேவை தேர்வு செய்துள்ளனர். பொதுவாக இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத குழுவினர் தான் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்து குண்டு வைப்பது வழக்கம். இது, அவர்களுடைய சதி திட்டமாக இருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்