பெங்களூரு : 'நாய் வளர்ப்போர் கவனமாக இருப்பது நல்லது. விலங்குகள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு காண்பிப்பது, ஆபத்தில் முடியும்' என, கால்நடை வல்லுனர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து கால்நடை டாக்டர் மோகன் கூறியதாவது:பெங்களூரில் நாய் வளர்ப்போர், நாய் ஆர்வலர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சில நாட்களாக நாய்களுக்கு எலிக்காய்ச்சல் அதிகரிக்கிறது. இக்காய்ச்சல் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.பெங்களூரில் சமீப ஆண்டுகளாக நாய்கள், பூனைகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விலங்குகளிடம் நோய்களும் அதிகரிக்கின்றன. இதற்கு முன்பு எலிகள் மூலமாக, எலிக் காய்ச்சல் பரவியது. ஆனால் இப்போது எலிகளிடம் இருந்து நாய்களுக்கும், நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது.எலிக்காய்ச்சல் பரவினால், விலங்குகளுக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளது. ஆனால் மனிதர்களுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை. இந்த காய்ச்சலை அலட்சியமாக நினைக்கக் கூடாது.நாய்களுடன் 'வாக்கிங்' செல்லும்போது, அவற்றை விளையாட விடும்போது கவனமாக இருக்க வேண்டும். எலிகளின் சிறுநீர் மீது நடந்தால், காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. நாய்களை வாக்கிங் அழைத்துச் சென்று வந்தவுடன், குளிக்க வைக்க வேண்டும். அறிகுறிகள்
l நாய்களுக்கு அதிகமான காய்ச்சல் இருப்பதுl இவற்றின் கண்கள் மஞ்சளாக இருக்கும்l நாய்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்குl மஞ்சள் காமாலைl காய்ச்சலின் அளவு 104/ 114 டிகிரி எட்டுவதுl நாய்களின் செயல்திறன் குறைவது முன்னெச்சரிக்கை
l வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, விழிப்புடன் இருக்க வேண்டும்l தினமும் குளிப்பாட்ட வேண்டும்l எலிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவதுl வெளியில் இருந்து வந்த நாய்களிடம் இருந்து, சிறார்களை தள்ளிவைக்க வேண்டும்l நாய் தின்று மிச்சம் வைத்த உணவை, வெளியே எறிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.