மேலும் செய்திகள்
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
2 hour(s) ago | 1
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
5 hour(s) ago | 4
பெங்களூரு : கோலார் காங்கிரஸ் வேட்பாளராக உணவுத்துறை அமைச்சர் மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ராஜினாமா செய்ய முயன்ற அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சு வெற்றியடைந்தது.கோலார் லோக்சபா தொகுதிக்கு, இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவின் மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு வாய்ப்பு வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.இதற்கு, முனியப்பா மீது இருக்கும் பகையின் காரணமாக, முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் கோஷ்டியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், எம்.எல்.ஏ.,க்கள் கொத்துார் மஞ்சுநாத், நாராயணசாமி, நஞ்சேகவுடா; எம்.எல்.சி.,க்கள் நசீர் அகமது, அனில்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். கட்சியின் முடிவுக்கு பகிரங்க எதிர்ப்பும் தெரிவித்தனர்.அவர்களுடன், பெங்களூரு காவிரி இல்லத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் நேற்று மாலை சமாதான முயற்சி மேற்கொண்டார்.அப்போது, கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால், ஒருங்கிணைந்து செல்லுங்கள். பகிரங்கமாக பேசுவதால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். வாக்காளர்களும் அதிருப்தி அடைவர். தங்கள் கருத்தை, மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். உங்கள் அதிருப்தியால், ம.ஜ.த.,வுக்கு லாபாமாகி விடும், என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவுரை கூறினர்.இதையடுத்து, அனைவரும் ராஜினாமா முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் உறுதி அளித்துள்ளனர். மேலும், நேற்று முன்தினம் ஆக்ரோஷமாக பேசியவர்கள், நேற்று சாந்தமாக இருந்தனர்.முதல்வர் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கும் போதே, முனியப்பா, தன் ஆதரவாளர்களுடன் பெங்களூரில் ஆலோசனை நடத்தினார். அவரது மருமகனுக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.ராஜினாமா செய்ய முடிவு செய்தமைக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். அதிருப்தியை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம். யாருக்கு சீட் வழங்கினாலும், ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற செய்வோம்.எம்.சி.சுதாகர், அமைச்சர், உயர்கல்வி துறைகாங்கிரசில் 40 ஆண்டுகளாக அரசியல் செய்கிறேன். 10 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தேன். எனவே என் குடும்பத்துக்கு சீட் கேட்டுள்ளேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.முனியப்பா, அமைச்சர், உணவுத்துறை
2 hour(s) ago | 1
5 hour(s) ago | 4