உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம்பெண் பலாத்காரம் காமுக உறவினர் கைது

இளம்பெண் பலாத்காரம் காமுக உறவினர் கைது

மங்களூரு: இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த, காமுக உறவினர் கைது செய்யப்பட்டார்.கேரளாவின் காசர்கோடுவை சேர்ந்தவர் சஜித், 27. இவரது உறவுக்கார தம்பதியின் 20 வயது மகள் மூல நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக, மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இளம்பெண்ணின் உதவிக்காக, சஜித் வந்தார்.மார்ச் 15ம் தேதி இரவு, இளம்பெண் சிகிச்சை பெற்று வந்த அறையின் கதவை அடைத்த சஜித், அவரை மிரட்டி பலாத்காரம் செய்தார். அத்துடன் இளம்பெண்ணை நிர்வாணமாக புகைப்படமும் எடுத்தார். சிகிச்சை முடிந்து இளம்பெண் காசர்கோடு சென்றார். ஏப்ரல் 4ம் தேதி, இளம்பெண்ணை மிரட்டி, சஜித் மங்களூரு அழைத்து வந்தார்.தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, தொடர்ந்து நான்கு நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால், உன்னையும், குடும்பத்தையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண், சஜித் மீது மங்களூரு கிழக்கு போலீசில் புகார் செய்தார். பலாத்கார வழக்கு பதிவு செய்த போலீசார், சஜித்தை கைது செய்தனர். சாம்ராஜ் நகரின் ஹனுார் தாலுகா பொன்னாச்சி கிராம பஞ்சாயத்து, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நீலாம்பிகே மகன் வைதேஷ், 28. பொன்னாச்சி கிராமத்தில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், அரசு வீடு கிடைக்க உதவும்படி, வைதேஷிடம் கேட்டு இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வைதேஷ், அந்த பெண்ணை அடிக்கடி பலாத்காரம் செய்தார். பெண்ணை ஆபாசமாக புகைப்படமும் எடுத்தார்.இந்நிலையில் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை, வைதேஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.இதனால் மனம் உடைந்த பெண், வைதேஷ் மீது மாதேஸ்வரா மலை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான வைதேஷை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை