| ADDED : ஏப் 01, 2024 11:41 PM
மங்களூரு, : தட்சிண கன்னடா, மங்களூரின், எனபதவு அருகில் உள்ள கோஸ்டல் சனிலா என்ற இடத்தில் வசிப்பவர் சகுந்தலா ஆச்சார்யா. இவரது வீட்டு முன், கிணறு உள்ளது. நேற்று முன்தினம் இவரது கணவர் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். உள்ளே சத்தம் கேட்டது.எட்டி பார்த்த போது, அபூர்வமான கருஞ்சிறுத்தை விழுந்திருப்பது தெரிந்தது. அக்கம், பக்கத்தினரிடம் கூறினார். அதன்பின் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியினர் உதவியோடு, கருஞ்சிறுத்தையை கிணற்றில் இருந்து மீட்டனர்.உணவு தேடி வந்த சிறுத்தை, தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என, வனத்துறையினர் கூறினர். அதை கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர். இத்தகைய கருஞ்சிறுத்தை மிகவும் அபூர்வமானதாகும். இதை பார்க்க மக்கள், கூட்டம், கூட்டமாக வந்தனர்.