| ADDED : ஜூலை 21, 2024 07:22 AM
பெலகாவி, ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 1.10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிராம பஞ்சாயத்து கணக்கரிடம் விசாரணை நடக்கிறது.பெலகாவி ராமதுர்கா ஹலகர்த்தி சோதனைச்சாவடியில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரை நிறுத்திய போலீசார், காருக்குள் சோதனை நடத்தினர். டிக்கியை திறந்து பார்த்தபோது, பெரிய பேக் இருந்தது. அதற்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில், அவர் நிப்பானி கிராம பஞ்சாயத்து கணக்கர் விட்டல், 42 என்பது தெரிந்தது. நிப்பானியில் இருந்து பாகல் கோட்டிற்கு காரில் 1.10 கோடி ரூபாய் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.ஆனால் பணம் கொண்டு செல்வதன் நோக்கம் பற்றி அவர் தெரிவிக்கவில்லை. இதனால் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர். விட்டலிடம் விசாரணை நடக்கிறது.