சிறார்களுக்கு பைக ் வழங்கிய பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்
தார்வாட் : ஓட்டுனர் உரிமம் இல்லாத மகன்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கிய நான்கு பெற்றோருக்கு, ஹூப்பள்ளி ஜே.எம்.எப்.சி., மூன்றாவது நீதிமன்றம், தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.தார்வாட் மாவட்டத்தில் நாளுக்கு விபத்துகள் அதிகரிக்கின்றன. விபத்து ஏற்படுத்தியது, பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. ஹூப்பள்ளியில் சில நாட்களுக்கு முன், தெற்கு போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நான்கு தனித்தனி இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு சிறார்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, வாகன உரிமையாளருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஹூப்பள்ளி ஜே.எம்.எப்.சி., மூன்றாவது நீதிமன்றத்திற்கு வந்த பெற்றோர் லட்சுமி பஜன்த்ரி, சதீஷ் பெலகட்டி, சுசிதா ஹுகரா, கிருஷ்ணராம் ஆகியோரை கண்டித்த நீதிபதி, நான்கு பேருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.