உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.3,800 கோடி திட்டம்: ஒடிசாவில் துவக்கி வைத்தார் பிரதமர்

ரூ.3,800 கோடி திட்டம்: ஒடிசாவில் துவக்கி வைத்தார் பிரதமர்

புவனேஸ்வர்: ஒடிசாவில், ரூ.3,800 கோடி மதிப்பிலான சுபத்ரா யோஜனா, ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி, இன்று துவக்கி வைத்தார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நூறு நாட்கள் ஆனதை குறிக்கும் வகையில், ஒடிசாவில் இன்று விழா நடந்தது. இதில், சுபத்ரா யோஜனா திட்டம், PMAY-G கீழ் 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவி மற்றும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 26 லட்சம் பயனாளிகளுக்கு கிரஹ பிரவேஷ் நிதி வழங்கும் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.கிரஹ பிரவேஷ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மோடி, புவனேஸ்வரில் உள்ள சபர் சாஹி குடிசைப்பகுதிக்கு சென்று பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அங்கு PMAY திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளின் வீடுகளை பிரதமர் திறந்து வைத்தார். ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியுடன், வீட்டுத் திட்டத்தின் பயனாளியான அந்தர்யாமி நாயக்கின் வீட்டிற்குச் சென்ற பிரதமர், அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய ஒடிசா இனிப்பு உணவை ருசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை