உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயிலில் அவசர பட்டனை அழுத்தியவருக்கு ரூ.5,000 அபராதம்

மெட்ரோ ரயிலில் அவசர பட்டனை அழுத்தியவருக்கு ரூ.5,000 அபராதம்

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களுக்கு முன், டிரினிட்டி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர், அவசர பட்டனை அழுத்தினார். இதனால் எம்.ஜி.ரோடு நிலையத்தில், 10 நிமிடம் ரயிலை நிறுத்த வேண்டி இருந்தது.ஆனால் யாருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது, எதற்காக பட்டனை அழுத்தினர், அழுத்தியது யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா மூலம், அவசர பட்டனை அழுத்தியவர் கண்டுபிடிக்கப்பட்டார். அந்நபர் மீண்டும் மெட்ரோ ரயிலில் ஏறினார். கப்பன் பூங்கா மெட்ரோ நிலையத்தில் இறங்கினார்அவரை மெட்ரோ ஊழியர் பின் தொடர்ந்தார். அந்நபரை நிறுத்தி விசாரித்தார். அந்நபரின் பெயர் ஹேமந்த், 21, என்பதும், ஜாலிக்காக அவசர பட்டனை அழுத்தியதை ஒப்புக்கொண்டார். அவரிடம், 5,000 ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறினோம். தன்னிடம் பணம் இல்லை என, அவர் கூறியதால் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அபராதம் செலுத்திவிட்டு மகனை அழைத்து சென்றனர்.மெட்ரோ ரயில் தண்டவாளத்தில், யாராவது எதிர்பாராமல் தவறி விழுந்தாலோ அல்லது கீழே குதித்தாலோ தகவல் தரும் நோக்கில், மெட்ரோ ரயிலில் உள்ள அவசர பட்டனை அழுத்தலாம். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரயில் நிறுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை