உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டில் பதுங்கிய திருடனிடம் ரூ.70 லட்சம் நகைகள் மீட்பு

காட்டில் பதுங்கிய திருடனிடம் ரூ.70 லட்சம் நகைகள் மீட்பு

பெங்களூரு : பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், சோலுாரில் வசிப்பவர் நரசிம்ம ரெட்டி, 30. இவர், தனி வீடுகள், பூட்டு போடப்பட்ட வீடுகளை குறி வைத்து, தங்க நகைகளை திருடினார். சமீபத்தில் கிரிநகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில், வீடு ஒன்றில் திருடினார்.போலீசார் விசாரணையில், திருட்டில் நரசிம்ம ரெட்டிக்கு தொடர்பிருப்பது தெரிந்தது. அவரை தேடி வந்தனர். நெலமங்களா அருகில் உள்ள, குடேமாரனஹள்ளி வனப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை நேற்று அதிகாலை கைது செய்தனர். இவரிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர், பெங்களூரில், 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு கொண்டவர். இவர் ஒரு இடத்தில் திருடிய பின், போலீசாருக்கு சவால் விடுத்து குடேமாரனஹள்ளி வனப்பகுதி, கிருஷ்ணகிரி வனப்பகுதிகளில் பதுங்குவார். அடுத்த திருட்டுக்கு தயாராகும் வரை, இங்கிருந்து வெளியே வரமாட்டார் என்பது, விசாரணையில் தெரிந்தது.வனத்தின் பாறைகளின் மீது, படுத்துறங்குவார். இப்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்