உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.175 கோடியப்பே... எஸ்.பி.ஐ., வங்கி மேலாளரின் தில்லாலங்கடி; ஜிம் மாஸ்டரும் கைது

ரூ.175 கோடியப்பே... எஸ்.பி.ஐ., வங்கி மேலாளரின் தில்லாலங்கடி; ஜிம் மாஸ்டரும் கைது

ஹைதராபாத்: ரூ.175 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பணியில் சைபர் பாதுகாப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 1930 என்ற உதவி எண்ணையும் அறிவித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பிறருக்காக வங்கிக் கணக்குகளை தொடங்க வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ரூ.175 கோடி முறைகேடு செய்த வழக்கில் தெலங்கானாவின் ஷாம்ஷெர்குஞ்ச் எஸ்.பி.ஐ., கிளை மேலாளர் மது பாபு காளி, 49, ரங்கா ரெட்டியைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் உபாத்யா சந்தீப் ஷர்மா,34, என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடியாளர்களுடன் இணைந்து நடப்பு வங்கிக் கணக்குகளைத் திறந்து, மோசடி செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T.sthivinayagam
ஆக 29, 2024 20:57

இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசுக்கு பின்பலமாக இருப்பதாக கூறும் சங்கங்களே காரணம் என மக்கள் கூறுகின்றனர்.


P. S. Ramamurthy
ஆக 29, 2024 14:16

Valia Payeri Merathu. In SBI now a days happening in many places. Just few days ago happened in Telungana.


முக்கிய வீடியோ