வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏழை யாத்திரிகர்கள் தங்கவும் வந்து செல்லவும் உதவ வேண்டும். அதற்காக இன்னும் கூடுதல் ஒதுக்கீடு தேவை
மேலும் செய்திகள்
சுதந்திர தின விழா:மதுரை அறக்கட்டளைக்கு விருது
16-Aug-2024
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு மட்டும் ரூ.113 கோடி செலவாகியுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில்
உத்தரபிரதேசம் அயோத்தியில் நிறுவப்பட்ட ராமர் கோவிலின் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா, கடந்த ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர்கள், முதல்வர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட மறுநாள் முதல் தற்போது ஏராளமான பொதுமக்கள், கடவுள் ராமரை வழிபட்டு வருகின்றனர். வரவு, செலவு
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலை நிர்வகித்து வரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் கூடியது. அப்போது, கோவிலுக்கான வரவு, செலவுகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது. ரூ.1,800 கோடி
இது குறித்து அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:- இதுவரையில் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவில் திறப்பு விழாவுக்கு மடடும் ரூ.113 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.670 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிகிறது. அதேவேளையில், வங்கி இருப்புக்கான வட்டி ரூ.204 கோடியுடன் சேர்த்து ரூ.363.34 கோடி வருமானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காணிக்கை
கடந்த 4 ஆண்டுகளில் 20 கிலோ தங்கமும், 13 டன் வெள்ளியும் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31ம் தேதி வரையில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
ஏழை யாத்திரிகர்கள் தங்கவும் வந்து செல்லவும் உதவ வேண்டும். அதற்காக இன்னும் கூடுதல் ஒதுக்கீடு தேவை
16-Aug-2024