உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலத் தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரை கொன்ற கொடூர மாஜி ராணுவ வீரருக்கு காப்பு

நிலத் தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரை கொன்ற கொடூர மாஜி ராணுவ வீரருக்கு காப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில், தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் (வயது 35), மனைவி சோனியா (வயது 32), தாய் சரோபி (வயது 65), ஐந்து வயது மகள் மற்றும் ஆறு மாத மகன் உட்பட 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் பூஷன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். காயமடைந்த தந்தை ஓம் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று (ஜூலை 22) தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். 2 ஏக்கர் நிலத்துக்காக தனது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
ஜூலை 22, 2024 19:46

பூமிக்காக சண்டை .. அதில்வந்த வினை கொலை.. இப்போது கைக்கு அழகாவக இரும்பு வளைகாப்பு , மணிஅடிச்சா சோறு தான் இனிமே இருண்ட வாழ்க்கை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி