உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சசி தரூருக்கு சனி திசை இருக்கு; சமூக வலைதள பதிவால் வெடித்தது சர்ச்சை

சசி தரூருக்கு சனி திசை இருக்கு; சமூக வலைதள பதிவால் வெடித்தது சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சசி தரூர், 'மறக்க முடியாத நாள்' என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை கொட்டியதால் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 361 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் உதவி வழங்கச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் சசி தரூர் பகிர்ந்துள்ளார்.

உருக்கம்

'வயநாடு மக்களுக்கு உதவி செய்தது மறக்க முடியாத நாள். மறக்க முடியாத ஒன்று எப்போதும் நினைவில் இருக்கும். ஏனெனில் அது சிறப்பு அல்லது மறக்க முடியாதது' என சசி தரூர் உருக்கமாக கூறியுள்ளார்.மோசமான பாதிப்பு ஏற்பட்டு நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தை, 'மறக்க முடியாத நாள்' என்று சசி தரூர் குறிப்பிட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஆக 04, 2024 20:12

பாய், தலையணை கொடுப்பது ஒரு உதவியா? அதுவும் காங்கிரஸ் காரர்களிடம் பணம் இல்லையா? ஒரு நூறு வீடு கட்டித்தரலாம், ஒரு சில குடும்பங்களை தத்து எடுக்கலாம் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர்களும். வெறும் பாய், தலையணை கொடுத்து நானும் உதவி செய்தேன் என்று தம்பட்டம் அடிப்பது இவர்களுக்கு சரியல்ல.


Swaminathan L
ஆக 04, 2024 16:16

சாவு வீட்டில் சௌக்கியம் விசாரிக்கும் மனோபாவம் இருப்பவர்கள் இப்படித்தான் பேசுவர்


Premanathan Sambandam
ஆக 04, 2024 10:04

இந்த ஆளை எல்லாம் மனித வர்க்கத்தில் சேர்க்க கூடாது


Narayanan Muthu
ஆக 04, 2024 09:21

எப்போதுமே எதையும் திரித்து வதந்தி பரப்புவதே வேலை.


Barakat Ali
ஆக 04, 2024 11:39

உன் திராவிட வார்ப்புதான் ....


Karunakaran
ஆக 04, 2024 08:51

ஐயா இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது இந்த நாளை எப்படி மறக்க முடியும். இதைத்தான் அவர் கூறியுள்ளார்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 07:44

ஊட்டுக்காரிய பரலோகம் அனுப்பிட்டு ஒரு மார்க்கமாத்தான் திரியறான் ......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை