உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்லகட்டா - ஒயிட்பீல்டு மெட்ரோ இன்று முதல் 6 கூடுதல் ரயில் இயக்கம்

செல்லகட்டா - ஒயிட்பீல்டு மெட்ரோ இன்று முதல் 6 கூடுதல் ரயில் இயக்கம்

பெங்களூரு: நம்ம மெட்ரோவின், செல்லகட்டா - ஒயிட்பீல்டு இடையிலான ஊதா பாதையில், இன்று முதல் ஆறு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:பயணியரின் வேண்டுகோளுக்கு இணங்கி, நம்ம மெட்ரோவின் ஊதா பாதையில், இன்று முதல் கூடுதலாக ஆறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன் இந்த பாதையில் ஒன்பது ரயில்கள் இயக்கப்பட்டன; இனிமேல் 15 ரயில்கள் இயங்கும்.ஊதா பாதையில் இயங்கும், மெட்ரோ ரயில்களின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 ரயில்களில், 10 ரயில்கள் பட்டந்துார் அக்ரஹாரா வரையிலும்; நான்கு ரயில்கள் ஒயிட்பீல்டு வரையிலும்; ஒரு ரயில் பையப்பனஹள்ளி வரையும் இயங்கும்.கருடாச்சார்பாளையா மெட்ரோ நிலையத்தில் வந்திறங்கும் பயணியர், பட்டந்துார் அக்ரஹாராவுக்கு செல்ல மூன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயில் கிடைக்கும். பயணியரின் வசதிக்காக, பையப்பனஹள்ளியில் இருந்து மாலை 4:40 மணிக்கு பதிலாக 4:20 மணிக்கு, மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு புறப்படும். மெட்ரோ பச்சை நிற பாதையில், எந்த மாற்றமும் இருக்காது. அட்டவணை பழையபடி இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை