உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்களே கண்காணிப்போம்; செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு!

நாங்களே கண்காணிப்போம்; செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கைது

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=obozrce9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மனு

இதனிடையே, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணத்தைப் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆரணியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் அரசு செய்யும் தாமதம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

தாக்கல்

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி அனுப்பி வைக்கப்பட்ட கோப்பின் நகல் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஆக.,23ம் தேதி இரவு தான் கவர்னர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அரசு தரப்பு வக்கீலாக, வாஷிங்டன் தனசேகரன் நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கண்காணிப்பு

இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'அரசியல்வாதிகள் தொடர்புடைய அனைத்து வழக்குகளுமே சிக்கல் நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அனைத்துக்கும் சிறப்பு வக்கீலை நியமித்து விசாரணை நடத்துவது இயலாத காரியம். சிறப்பு வழக்கில் தனது பணியை கவனத்தில் வைத்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணிக்கும். விசாரணை எப்படி நடக்கிறது என்பதை அறிய, அடிக்கடி அறிக்கை பெற்று ஆய்வு செய்யப்படும்,' என நீதிபதிகள் கூறினர்.

கேள்வி

மேலும், செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்ட கோப்புகளை 6 மாதங்களை கடந்தும் கவர்னர் நிலுவையில் வைத்தது ஏன்? என்றும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Ramesh Sargam
செப் 03, 2024 16:37

சரியாக கேட்டீர்கள்.


Ramesh Sargam
செப் 03, 2024 13:57

ஆரணியை சேர்ந்த பாலாஜி ஏன் திறமையை வெளிப்படுத்தி வேலை கோராமல், குறுக்குவழியில் பணத்தை லஞ்சமாக கொடுத்து வேலை வாங்க முயன்றார்? ஒரு சிலர் கேட்கலாம், லஞ்சம் இல்லாமல் நம்நாட்டில் ஒரு வேலையும் ஆகாது என்று. லஞ்சம் கொடுக்க முடிந்த வசதியானவர்கள் லஞ்சம் கொடுத்து அவர்கள் வேலையை பூர்த்தி செய்துகொள்ளலாம். கொடுக்கமுடியாத ஏழை, எளியவர்கள், சட்டத்திற்கு மதிப்புக்கொடுப்பவர்கள் எப்படி வேலையை பூர்த்தி செய்துகொள்வது? லஞ்சம் கொடுப்பதும் ஒரு குற்றம். ஆக, இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், நீதிமான்கள், லஞ்சம் கொடுப்பவர்களையும், லஞ்சம் வாங்குபவர்களையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் - அவர்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளாக...


Mettai* Tamil
செப் 03, 2024 09:35

தமிழ் நாட்டில் ஊழல் ஊற்றின் பிறப்பிடம் தெரியமா வேணு ?


mohamedismail
செப் 03, 2024 08:10

அனைத்து அரசியல் வாதிகள் தான் குடும்ப சகிதம் நல்ல நிலையில் வாழ ஊர் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க த்தான் செய்வார்கள். விதிவிலக்கு யாரும்ஒரு சிலர் தவிர கிடையாது


Parasumanna Sokkaiyer Kannan
செப் 03, 2024 07:44

We have a thoroughly useless Governor and a thoroughly useless Central Government.


Sivak
செப் 02, 2024 23:34

கால தாமதம் பற்றி கோர்ட் கேள்வி எழுப்புவது கொடுமை நீதிபதிகளுக்கும் கோர்ட்டுக்கும் அந்த தகுதியே இல்லை ...


G.Subramanian
செப் 02, 2024 21:29

அரசியல்வாதிகளின் ஊழல்கள் உரிய காலத்தில் விசாரிக்கப் பட்டு தீர்ப்பு வழங்கப் படுவதில்லை என்பது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 18 வருடம் விசாரணை நடந்து அவர் கல்லறைக்கு உறங்கப் போனவுடன் வந்ததும் அவர் இறந்து விட்டதால் அவரை குற்றவாளி என்று கூறி தண்டிக்க இடமில்லை முடிவில் அவருக்கு துணை இருந்தவர்கள் மட்டும் தண்டணை பெற்று 4 வருடம் சிறை தண்டணை அநுபவித்தனர் பாலாஜி உண்மையான குற்றவாளியா? அவர் குற்றம் புரிந்து யாருடன் பணத்தை பகிரந்து கொண்டார் ? உண்மைகள் வெளிவர முடியாமல் அரசியல் தடுக்கின்றதோ?


Unmai vilambi
செப் 02, 2024 19:04

நம்ம கோர்ட் நடைமுறைகள் மொத்தமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் . Totally waste judicial tem


venugopal s
செப் 02, 2024 18:09

ஆளுநருக்கு தலைக்கு மேல் ஆயிரம் முக்கியமான வேலைகள் உள்ளன.ஆரியம் திராவிடம் பற்றிய ஆராய்ச்சி போன்ற முக்கியமான வேலைகள் உள்ளதால் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத வேலைகளை மெதுவாகத்தான் செய்வார்.


Kasimani Baskaran
செப் 02, 2024 21:03

இதே கேள்வியை திமுக மந்திரிகளிடமும் கேட்கவும்.


Hari
செப் 02, 2024 21:20

No jamin for your kothadimai. Minister.... Venugopal...


Kasimani Baskaran
செப் 02, 2024 16:56

கீழமை நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என்றால் அணைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே நடத்தலாமே. எப்படி ஒரு நீதிமன்றம் மீது உச்ச நீதிமன்றம் சந்தேகத்தை எழுப்ப முடியும்? அப்படியென்றால் உச்சநீதிமன்றம் மீது கூட இன்னொரு நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுதலாமே - உதாரணத்துக்கு தண்டனையை நிறுத்தி வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்யும் நடைமுறையை...


முக்கிய வீடியோ