உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர் ஏழு நக்சல்கள் பலி

சத்தீஸ்கரில் என்கவுன்டர் ஏழு நக்சல்கள் பலி

நாராயண்பூர் : சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய 'என்கவுன்டரில்', ஏழு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரில் நாராயண்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள், நக்சல் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. மத்திய ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, கோப்ரா உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, கோபல், துல்துலி கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினரை நோக்கி, நக்சல் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பியோடினர். எனினும், தப்பியோடிய நக்சல் அமைப்பினரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயமடைந்தனர். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் துப்பாக்கிகள், வெடிப்பொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்