மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
1 hour(s) ago | 1
இளம்பெண் தற்கொலை முயற்சி
3 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
3 hour(s) ago
விஜயபுரா: ''பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டருக்கும், பல்லாரியில் ஸ்ரீராமுலுவுக்கும் சொம்பு கேரன்டி,'' என, காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கிண்டல் அடித்தார்.விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் என்னை கவுரவத்துடன் நடத்துகிறது. இந்த கட்சியில் உள்ள என்னை பற்றி பரிதாபத்துடன் பேசி, பா.ஜ., தலைவர்கள் முதலை கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரசின் ஒரு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கூட பா.ஜ.,வில் சேரும் சூழ்நிலை இல்லை.நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. என்னை ஏன் பா.ஜ., அமைச்சரவையில் சேர்க்கவில்லை; சட்டசபை தேர்தலில் ஏன் சீட் கொடுக்கவில்லை? பா.ஜ.,வில் இருந்து விலகிய என்னை, ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, காங்கிரஸ் சீட் கொடுத்தது. ஸ்டார் பிரசாரகர்கள் பட்டியலில் சேர்த்தது.கடந்த 25 ஆண்டுகளாக, பா.ஜ.,வில் இருந்த நான் அக்கட்சியின் ஆழம், அகலத்தை பார்த்தவன். தேர்தல் வரும்போது ஜாதிகளுக்கிடையே விஷ விதையை துாவுவது, பா.ஜ.,வின் சுபாவம். இதை நான் அருகில் இருந்து பார்த்தவன்.பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார உரைகளை கவனித்தால், 10 ஆண்டு ஆட்சியில் அவர் தோல்வி அடைந்தது தெரிந்தது. தோல்வி பயம் அவரது பேச்சில் தெரிகிறது.கர்நாடக அரசின், வாக்குறுதித் திட்டங்களால் மாநிலம் திவால் ஆகும் என கூறியிருந்தனர். ஆனால் மாநில மக்கள், விலை உயர்வு நேரத்தில் நிம்மதியாக வாழ்க்கை நடத்த, வாக்குறுதித் திட்டங்கள் உதவுகின்றன. ஏழைகளுக்கு உதவியதை சகிக்க முடியாமல், பிரதமர் விமர்சிக்கிறார்.இம்முறை லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். விஜயபுராவில் ராஜு அலகூர் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டருக்கும், பல்லாரியில் ஸ்ரீராமுலுவுக்கும் சொம்பு கேரன்டி.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago