உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு தாவிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,: சொல்லும் காரணம் என்ன?

பா.ஜ.,வுக்கு தாவிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,: சொல்லும் காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கர்தார் சிங் தன்வார் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். 'ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது' என கர்தார் சிங் தன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர், முன்னாள் டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று(ஜூலை 10) பா.ஜ.,வில் இணைந்தனர்.

விலகியதற்கு காரணம் என்ன?

இது தொடர்பாக, ஆம்ஆத்மி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர் கூறியதாவது: டில்லி மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சிப் பணிகள் இல்லாததால், தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார் என இரண்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் பாராட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.Isaac
ஜூலை 10, 2024 21:54

சுடு சுரணை இல்லாதவர்


Training Coordinator
ஜூலை 10, 2024 21:20

பாஜக தனது வேலையை ஆரம்பித்து விட்டது. குதிரை பேரம் அல்லது சிறை மிரட்டல். வந்து தான் ஆகனும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 10, 2024 20:25

செய்த ஊழலுக்கு கெஜ்ரி ஒருபோதும் வெளியே வரமுடியாது என்ற நம்பிக்கை ஆம் ஆத்மீ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வந்துவிட்டது. விரைவில் ஒட்டுமொத்த ஆம் ஆத்மீ கட்சி கெஜ்ரியின் மனைவியின் தலைமையில் பிஜேபியில் இணைய வாய்ப்புள்ளது.


Narayanan Muthu
ஜூலை 10, 2024 20:10

என்ன பெரிய காரணம் இருக்கப்போவுது. எல்லாம் பணம்தான். வரும் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். கிடைக்கும் போது சுருட்ட வேண்டியதுதானே.


Jysenn
ஜூலை 10, 2024 18:48

Dmk and admk in the south and app in the north. Not tainted by corruption. The purest of the pure parties.


Vathsan
ஜூலை 10, 2024 18:12

பெட்டி கை மாறி இருக்கும்.


rama adhavan
ஜூலை 10, 2024 19:00

அக் கட்சியில் இருப்போருக்கு அக் கட்சியே அடிக்கடி பெட்டி தருமோ?


K.Ramachandran
ஜூலை 10, 2024 17:41

ஆண்டு சட்டமன்ற தேர்தல் டில்லியில் வருகிறது. கட்சி தாவல் துவங்கி விட்டது. இவர் AAP ஐ விட்டு BJP பக்கம் வருவதை பார்த்தால், BJP வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று நினைக்கிறன்


J.Isaac
ஜூலை 10, 2024 17:18

.கட்சி தாவல் தடைச்சட்டம் அவசியம் தேவை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ