மேலும் செய்திகள்
தமிழ் நடிகை தற்கொலை
2 hour(s) ago
காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கர ரெட்டி, சிக்கபல்லாபூர் தொகுதியில் தனக்கு சீட் மறுக்கப்பட்டால், கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.லோக்சபா தேர்தலில், கோலார் தொகுதியை போன்று, சிக்கபல்லாபூர் தொகுதியும் கூட, காங்கிரசின் கையை கடிக்கிறது. முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, மூத்த தலைவர் சிவசங்கர்ரெட்டி, ரக்ஷா ராமையா ஆகியோர் சீட் பெற, நான், நீ போட்டியென போடுகின்றனர். இவர்களுடன் மாநில தலைவர்கள், பல சுற்று ஆலோசனை நடத்தியும், ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை.யாரும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. தங்களுக்கே சீட் வேண்டும் என, மூவரும் பிடிவாதம் பிடிக்கின்றனர். சிவசங்கரப்பா ஒருபடி முன்னே சென்று, காங்கிரசுக்கு டாட்டா காண்பித்து வெளியேற தயாராக நிற்கிறார்.இது தொடர்பாக, அவர் கூறியதாவது:வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை, நான் காத்திருப்பேன். சிக்கபல்லாபூர் சீட் விஷயத்தில், சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு சீட் கிடைக்காவிட்டால், கட்சிக்கு ராஜினாமா கொடுத்து வெளியேற தயங்கமாட்டேன்.கடந்த பல ஆண்டுகளாக, காங்கிரசில் நேர்மையாக பணியாற்றுகிறேன். தாலுகா பஞ்சாயத்து உறுப்பினரானதில் இருந்து, கவுரி பிதனுார் சட்டசபை தொகுதியில், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வானது வரை, இதே கட்சியில்தான் இருக்கிறேன். கட்சி எனக்கு விவசாயத்துறை அமைச்சராக, துணை சபாநாயகராக பதவி கொடுத்து கவுரவித்தது.கட்சித் தொண்டர்கள், மூத்த தலைவர்களின் விருப்பப்படி, சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.நான் உள்ளூரை சேர்ந்த வேட்பாளர். கட்சியின் மூத்த தலைவர். கட்சிக்கு கட்டுப்பட்டு பணியாற்றும் என்னை, தலைவன் என, அடையாளம் காண்பதற்கு பதிலாக, வெளியில் உள்ளவர்களை ஆதரிப்பது வருத்தமளிக்கிறது.தேர்தலில் போட்டியிட, சீட் பெறுவதில் பணமே முக்கிய பங்கு வகிப்பது துரதிர்ஷ்டவசமானது. வேறு ஒருவருக்கு சீட் கொடுத்தால், அவரது வெற்றிக்காக உழைக்கமாட்டேன். நல்ல வேட்பாளர் யார் என்பதை, மக்களே தீர்மானிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
2 hour(s) ago