உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் போட்டியிடுகிறார். சகோதரர் ராகுலுக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: நாட்டின் செல்வம் 5 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி செயல்படுத்தினார். இதனால் சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

நன்கொடை

ஊழலுக்கான திட்டத்தை பா.ஜ., வகுத்துள்ளது. பணக்காரர்களிடம் நன்கொடை பெற்று, கட்சியை பலப்படுத்தி, மக்களிடையே வெறுப்பை பரப்பும் வேலையை பா.ஜ., வினர் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக வாரணாசி எம்.பி.யாக நரேந்திர மோடி இருந்து வருகிறார். அவர் அங்குள்ள எந்த கிராமத்திற்கும் செல்லவில்லை. எந்த விவசாயிகளிடமும் நேரில் சென்று பிரதமர் மோடி நலம் விசாரித்தது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

V RAMASWAMY
மே 13, 2024 11:17

இந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது, ஏதோ பழைய செய்தித்தாள்களை புரட்டிப்பார்த்து உளருகிறார்கள் ஜெயித்தால் இன்னமும் பணம் சேர்க்கலாம், தோர்த்தாலும் கவலையில்லை, தேவைக்கு மேல் இன்னும் இரண்டு மூன்று தலைகளுக்கு போதும் அளவுக்கு இருக்கிறது


Rajasekar Jayaraman
மே 13, 2024 10:15

செய்த குடிசை தொழில் பாதிப்படைந்ததோ ஐயோ பாவம்


GoK
மே 12, 2024 20:51

இப்பதான் எழுந்திங்களா, வருஷமாச்சு இப்பவரீங்க


Sivasankaran Kannan
மே 12, 2024 19:19

இன்னுமா இந்த குடும்பம் விழிக்க வில்லை லேயே மக்கள் இந்த புத்திசாலி கருத்துக்கு பதில் சொல்லி விட்டார்கள்


subu
மே 12, 2024 19:07

The most affected group is congres they have trucks and truck loads of old currency her and in pakistan that's why she and her brother keep talking about even now poor people


குமரி குருவி
மே 12, 2024 18:59

அரசியல் கற்றுக்கொண்டு வந்து பேசலாம்


sankar
மே 12, 2024 18:51

விவரம் இல்லாத இது போன்ற உளறல்கள்தான் உங்களை வீட்டுக்கு அனுப்பியது - பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டுது கான்கிராஸ், அதன் தலைகள் சிதம்பரம், சோனியா மற்றும் பாகிஸ்தான் என்பது ஊருக்கே தெரியும் - இந்தியாவின் இந்த நடவடிக்கையே பாகிஸ்தான் திவாலுக்கு காரணம்


Durai
மே 12, 2024 18:45

பணமதிப்பிழப்பு குறுகிய காலத்தில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நமது பொருளாதாரம் வியக்கத்தக்க அளவு மீண்டெழுந்து தற்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட புரட்சி பணமதிப்பிழப்பையே சாரும்


Duruvesan
மே 12, 2024 18:42

பிஜேபி கூட டீல், வாதார கேஸ் கிளோஸ் பண்ண, கைமாறு ராவுள் ராபரேலி தோல்வி அப்படின்னு எல்லோரும் சொல்றாங்க உண்மையா?


என்றும் இந்தியன்
மே 12, 2024 18:40

இதை சொல்ல ஆண்டுகளா???இதனால் தெரிவது ஒன்றே ஒன்று தான் ஸ்டாலின் ராகுல் பிரியங்கா என்று எல்லா தண்ட கருமாந்திரங்களும் இப்படி உளற எழுதிக்கொடுப்பது இவர்கள் வைத்திருக்கும் Consultant என்று தெளிவாகத்தெரிகின்றது மோடி பிஜேபியை கீழ்மைப்படுத்த என்ன வழி என்று கேட்பார்கள் இந்த Consultant ஐ வருடத்திற்கு இவர்கள் Consultant க்கு கொடுக்கும் தொகை குறைந்தது ரூ கோடி அவர்கள் இப்படி எழுதிக்கொடுப்பார்கள் இவர்கள் மேடைக்கு வந்து உளறுவார்கள்????சுய சிந்தனையற்ற இந்த கஸ்மாலங்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி