உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய், தந்தையை சுவரில் மோதி கொலை செய்த மகன் கைது

தாய், தந்தையை சுவரில் மோதி கொலை செய்த மகன் கைது

கோட்டா:சொத்துத் தகராறில் பெற்றோரைக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரின் நகோடா காலனியில் வசித்தவர் பிரேம்பிஹாரி கவுதம்,75. ஓய்வு பெற்ற கிராம பஞ்சாயத்து செயலர். அவரது மனைவி தேவகி பாய்,72. இந்த தம்பதியின் மூத்த மகன் ககேந்திர கவுதம்,50. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு இளைய சகோதரரும் இருக்கிறார்.தந்தையின் பென்ஷன் பணம் மற்றும் குடும்பச் சொத்து தொடர்பாக ககேந்திர கவுதம் பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாய் மற்றும் தந்தையின் தலையை சுவரில் மோதிய ககேந்திரா, ஆத்திரம் அடங்காமல் கத்தியால் இருவரையும் சரமாரியாகக் குத்தினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.அவரது இளைய சகோதரர் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் இரு உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும்,ககேந்திர கவுதம் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ககேந்திர கவுதமை கைது செய்தனர்.சம்பவம் நடந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவரது மனைவி, குழந்தைகளை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி