உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு திருமண சட்டம் செல்லாது ம.பி., ஐகோர்ட் வினோத உத்தரவு

சிறப்பு திருமண சட்டம் செல்லாது ம.பி., ஐகோர்ட் வினோத உத்தரவு

ஜபல்பூர் :ஹிந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே நடந்த திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டாலும், இஸ்லாமிய தனிச்சட்டத்தின் கீழ் அது செல்லாது என்ற தீர்ப்பை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.மாற்று மதங்களைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் மதம் மாறாமல் திருமணம் செய்து கொள்ள, சிறப்பு திருமண சட்டம் இடம் அளிக்கிறது.அந்த வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சபி கான் - சரிகா சென் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் மதம் மாறாமல் திருமணம் செய்ய முடிவு செய்ததால், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். இந்த திருமணத்துக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, காதலர்களை பிரிக்க அவர்கள் திட்டமிட்டனர்.திருமண பதிவு முடியும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி, சபி - சரிகா ம.பி., உயர் நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா முன் விசாரணைக்கு வந்தது.அப்போது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், அந்த பெண் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும், வேற்று மத திருமணம் தங்களை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக்கும் என்றும் முறையிட்டனர்.இதை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆணுக்கும், உருவ வழிபாடு செய்யும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் இஸ்லாமிய சட்டப்படி முறையற்றதாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிய தனிச்சட்டம் இதை ஏற்றுக் கொள்ளாது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. முறையற்ற திருமணமாகவே கருதப்படும்.எனவே, மனுதாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

உ.பி.,யில் நேர்மாறான தீர்ப்பு!

ம.பி., உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நேர்மாறான தீர்ப்பை உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து - முஸ்லிம் ஜோடி ஒன்று, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர்; குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதும், பாதுகாப்பு கோரி உ.பி., உயர் நீதிமன்றத்தை நாடினர். மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா சர்மா, மனுதாரர்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு திருமணத்துக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தினார். சட்டப்படியான திருமணத்தை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்த அவர், பதிவு திருமணம் முடியும் வரை மனுதாரர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டார். பதிவு திருமணம் முடிந்ததும், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
ஜூன் 01, 2024 12:12

மத அடையாள உடை, பொருட்கள் அணிந்திருந்தால்தான் அவரவர் என்ன மதம் என்று தெரியும் மற்றபடி எல்லோர் பார்வையும் ஒன்றுதான்


ஆரூர் ரங்
ஜூன் 01, 2024 10:40

கலப்புத் திருமணம் ஏற்பதில்லை. இது என்ன நியாயம்?


jayvee
ஜூன் 01, 2024 07:39

இந்த நீதிபதிக்கு UCC மீது உள்ள வெறுப்பு தெளிவாக தெரிகிறது.. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்ல துணிவில்லாத ஒரு தீர்ப்பு


GMM
ஜூன் 01, 2024 05:39

பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு / சிரிப்பு திருமண சட்டம் இயற்றியது யார்? அரசு நிர்வாக, நீதிமன்றத்திற்கு குடும்பத்தில் என்ன வேலை. மேஜர் ஆன பின் பிள்ளைகள் திருமண முடிவு எடுக்கலாம் என்றால், பெற்றோரை முதுமையில் அரசு ஊழியர்கள் நியமித்து பாதுகாத்து, பராமரிக்க வேண்டும். முடியுமா.? பெற்றோர்கள் கடனுக்கு யார் பொறுப்பு மற்றும் பெற்றோர்கள் சொத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்.? இறந்தால் கொள்ளி வைக்கும் அரசு பிரதிநிதி பெயர். பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாத திருமணம் கூடாது. இந்து பெண்கள் தான் ஏமாற்ற படுவர். மத மாற்றம் தடை அவசியம். இது போன்ற சட்டங்களை தணிக்கை செய்ய தான் கவர்னர், நீதிமன்றம்.


R Kay
ஜூன் 01, 2024 01:21

ஆள் பிடிக்கும் வேலையாகவே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மாட்டினால், வாழ்க்கையையே தொலைத்துவிட வேண்டியிருக்கும். பெண்களே உஷார்


rama adhavan
ஜூன் 01, 2024 01:15

தீர்ப்பு சரியே. கலப்பு திருமணத்திற்கு என தனி சட்டம் தேவை. அதற்கு என மதம் இல்லா திருமண சட்டம் தேவை. இதன் கீழ் திருமணம் புரிவோருக்கு இட ஓடுக்கீடும் கூடாது. அவர்கள் oc


Jagan (Proud Sangi)
ஜூன் 01, 2024 00:32

ம பி நீதியரசர் செய்ததே சட்டம். உபி நீதியரசர் ஒரு சர்மா, எனவே வேறு மாதிரி குடுத்தால் பிரச்னை என்பதால் தப்பாக தீர்ப்பு சொல்லிவிட்டார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை