உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திடீர் உடல்நலக்குறைவு: கவிதா மருத்துவமனையில் ‛அட்மிட்

திடீர் உடல்நலக்குறைவு: கவிதா மருத்துவமனையில் ‛அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் தொடர்புடையதாக தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த இருவழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார். கடந்த ஏப்ரல் 11ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக டில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Roopkumar
ஜூலை 17, 2024 18:42

சிகிச்சைக்குப் பிறகு பழையபடி சிறைக்குச் செல்லலாம். கூடிய விரைவில் விசாரணையை முடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்


Kesavan
ஜூலை 17, 2024 11:51

குற்றச்சாட்டை நிரூபிக்க வில்லை என்றால் அமலாக்க துறையும் சிபிஐயும் சிறையில் இருந்த நாட்களை கணக்கில் கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோடி ரூபாய் நட்டயீட்டை தர வேண்டும் அப்போதுதான் இந்த மாதிரியான அரசியல் கைதுகள் நீதிமன்றத்தின் மௌனங்கள் ஆகியவற்றுக்கு விடிவு வரும் எல்லா குற்றவாளிகளும் பிஜேபியில் இருக்கும்போது சிறையில் எப்படி குற்றவாளிகள் இருக்க முடியும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் பிஜேபியில் தான் இருந்திருப்பார்கள் அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்பதால் தான் அதிகாரத்தை எதிர்த்து அரசியல் நடத்தியிருக்கிறார்கள் காலம் மாறும் இதற்குக் காரணமான அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படுவார்கள்


S.Govindarajan.
ஜூலை 17, 2024 20:04

வேலிக்கு ஓணான் சாட்சி


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 21:41

திடீர்ன்னு மயங்கி விழுந்தாரா ?? குட் நியூஸ் .... வாழ்த்துக்கள் ..... இனிமே ரொம்ப அலட்டிக்கக் கூடாது .....


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2024 21:06

ஜெயிலுக்குள் போகணும்ன்னா அணைத்து அரசியல்வாதிக்கும் உடம்பு சரியில்லாம போயிடுது. ஆனால் ஜெயிலுக்குள்ள விட்டு, சுளுக்கெடுத்தா தான், இவர்கள் குணமாவார்கள்.


Indhuindian
ஜூலை 16, 2024 20:27

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா


cbonf
ஜூலை 16, 2024 20:11

கவிதா அப்ரூவராக மாறுகிறாள். அவள் லஞ்சத்தை ஒப்புக்கொள்ளப் போகிறாள். அவர் கெஜ்ரிவால், சிசோடியா போன்றோரையும் சிக்க வைப்பார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிக்கவைத்ததற்காக அவருக்கு மன்னிப்பு வழங்க சிபிஐ ஒப்புக்கொண்டது.


Premanathan Sambandam
ஜூலை 16, 2024 19:42

ஜாமீனில் வீட்டுக்கு வந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டால் உடல் நிலை சரியாகி விடும்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 16, 2024 19:13

அதெப்படி பங்கு திருட்டுத்தனம் செய்யும்போது மங்கல கரமாக இருந்து ஓடிஆடினவங்க தறிட்டுப்பாட்டம் ஊர்ஜிதமாகி மாட்டின ஒடனே சக்கரை வியாதி என ஒருசிலருரம் / சில ஆட்கள் மயங்கி சுருண்டு வீழ்வதும் வேடிக்கை அல்லது வாடிக்கையாக உள்ளது பங்கு..


மேலும் செய்திகள்