உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தில் முடிவுகள் எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தில் முடிவுகள் எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி : சி.எஸ்.ஐ., எனப்படும், தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தை கவனிக்கவும், சினோடு பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தவும் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு, அது தொடர்பாக முடிவுகள் எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.தென்னிந்திய திருச்சபையின், 'மாடரேட்டர்' எனப்படும், தலைமை பேராயராக தர்மராஜ் ரசலம் உள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 டயோசிஸ்கள், தென்னிந்திய திருச்சபையில் உள்ளன. சி.எஸ்.ஐ.,க்கு சொந்தமாக, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன. சி.எஸ்.ஐ.,யை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும், சட்ட விதிகளை பின்பற்றி சினாடு நிர்வாகிகள் தேர்தலை நடத்தக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சினாடு மாடரேட்டர் தேர்தலை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசனை தேர்தல் அதிகாரியாக நியமித்து, நான்கு மாதங்களில் தேர்தலை முடிக்க உத்தரவிட்டது.இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது.விசாரணையின் இறுதியில், தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தை கவனிக்கவும், சினோடு பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியன், வி.பாரதிதாசன் ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனு விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விசாரணை முடிவடையும் வரை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு தேர்தலை நடத்தவும், திருச்சபை நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஜூலை மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஆரூர் ரங்
மே 24, 2024 15:18

அப்பாவு வின் கருத்தென்ன?


ஆரூர் ரங்
மே 24, 2024 12:08

இதே திருச்சபையின் எழுபத்தைந்தாமாண்டு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு வானளாவப் புகழ்ந்தார். திறந்த உலகில் சிறந்த திருச்சபை. அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குவோம் என்ற பொருளில் கொண்டாடப்படுகிற தென்னிந்திய திருச்சபை பவள விழாவினை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்றார். எனக்கு சிரிப்பு வரவில்லை.


ஆரூர் ரங்
மே 24, 2024 11:15

தேவாலய நிர்வாகிகளுக்குள் அதிகாரம், நிதித் தகராறில் சர்ச்சிலேயே அடிதடி நடந்த நிகழ்வுகள் உண்டு. அவர்கள் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் நியமனங்களில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இதே திருச்சபை பிஷப் ஒருவரே மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு பலரிடம் தலா ஐம்பது லட்சத்துக்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கும் உண்டு.


திண்டுக்கல் சரவணன்
மே 24, 2024 10:57

சிஎஸ்ஐ,க்கு சொந்தமாக, லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன/ இது எப்படி அரசியல்வாதிகளின் கண்ணை உறுத்தவில்லை வேறுவிதமாக சரிக்கட்டி விடுவார்களோ என்னவோ


Svs Yaadum oore
மே 24, 2024 11:33

கண்ணை உறுத்தி நிர்வாகத்துடன் கூட்டணி அமைத்து ஏராளமான சொத்துக்கள் திருடி விற்பனை செய்து அந்த பணத்தை பதுக்கி விட்டார்கள் இது பல ஆண்டுகளாக நடந்து வருவது இதெல்லாம் இந்த நாட்டு மக்கள் சொத்து யார் நிர்வாகி எப்படி கொள்ளையடிப்பது என்ற உள்ளடி வேலைதான் இப்போது பிரச்சனை மற்றும் இப்பொது நீதி மன்ற வழக்கு


Nagercoil Suresh
மே 24, 2024 09:40

ஊருக்கு தான் உபதேசம் ஆனால் தட்டுவதோ சுப்ரீம் கோர்ட்டின் கதவுகள், இவர்கள் அரசியல்வாதிகளைவிட மோசமானவர்கள், மக்கள் தான் சிந்தித்து செயல்படவேண்டும்


Sampath
மே 24, 2024 09:37

CSI அறநிலையத்துறை ஒன்றை நிர்வாக வசதிக்காக தமிழக அரசு உருவாக்க வேண்டும் அதற்க்கு ஒரு அமைச்சரவையை உருவாக்க வேண்டும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்


duruvasar
மே 24, 2024 09:15

இங்க இங்கதான்ய்யா நிக்கராங்க நம்ம மதசார்பற்ற சிறுபான்மையினர் காவலர் கூட்டம்


GMM
மே 24, 2024 08:39

ஏழு லட்சம் கோடி சொத்து கிருத்துவர்கள் தானம், நன்கொடை அல்லது கிரயம் பெற்று இருந்த ஆவணம் வேண்டும் அப்படி இல்லாத போது இந்து மத மக்கள் அபகரிப்பு சொத்து அதனை பறிமுதல் செய்ய வேண்டும் சிறுபான்மை அந்தஸ்து நீக்க வேண்டும் தென்னிந்திய திரு சபை யாழ்ப்பாண இணைப்பு கூடாது அது தனி நாட்டு பகுதி மாநிலம் தனியாக கொள்கை வகுப்பதால், தமிழக, கேரளா திருச்சபை மட்டும் இருக்க வேண்டும் காங்கிரஸ் எந்த சீர்திருத்தமும் செய்யவில்லை?அதுவரை பொருளாளர் இந்து மதம் சார்ந்தவராக இருக்க வேண்டும்


Swamimalai Siva
மே 24, 2024 08:34

இந்து கோயில்களை ஒரு சட்டம் போட்டு அரசுடமை ஆக்கின மாதிரி, இதற்கும் ஒரு சட்டம் போட முடியாதா??


Subramanian
மே 24, 2024 08:26

இந்த மாதிரி பிரச்சனை இந்து மதத்தில் ஏற்பட்டால் உடனோ அரசு தலையிடும், சொத்துகளை அரசுடமையாக்கும். சிறுபான்மையர் என்றால் தலையிடாது என்ன சட்டமோ என்ன நியாயமோ


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி