உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -நிலைக்குழு உறுப்பினர் பதவி தேர்தல் கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

-நிலைக்குழு உறுப்பினர் பதவி தேர்தல் கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடில்லி:மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தலை அவசர அவசரமாக நடத்த அழுத்தம் கொடுத்தது குறித்து, துணை நிலை கவர்னர், இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லி மாநகராட்சியில் காலியாக இருந்த நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு கடந்த 27ம் தேதி அவசரம் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சிக் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் மேயருக்கு மட்டுமே உண்டு. ஆனால், அதிகாரிகளைப் பயன்படுத்தி கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது என குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால், பா.ஜ., கவுன்சிலர், நிலைக்குழு உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பை எதிர்த்து, மேயர் ஷெல்லி ஓபராய், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது.இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்வரை நிலைக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், 'நீதிமன்ற உத்தரவை மீறி நிலைக்குழுத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டில்லி முனிசிபல் சட்டத்தை மீறி, நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலை அவசரம் அவசரமாக நடத்த துணைநிலை கவர்னர் அழுத்தம் கொடுத்தது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரங்களைப் தவறாக பயன்படுத்தினால் அது ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்து. தசரா விடுமுறைக்குப் பின் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்'என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை