உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்1007வது ராமானுஜர் திருநட்சத்திர விழாசுவாமி ராமானுஜரின் 1007வது திருநட்சத்திர திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேரம்: காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை: திவ்யபிரபந்த சேவாகாலம்; 9:30 மணி முதல் 10:30 மணி வரை: ஸ்ரீ வைஷ்ணவ பகவந்தர்களால் கூட்டு சங்கீதம் மூலம் ராமானுஜருக்கு புஷ்ப யாகம்; 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: யோகமூர்த்தி சுவாமிகள், அவரது குழுவினரின் திவ்ய பிரபந்த இசை நிகழ்ச்சி; மதியம் 12:30 மணி: சாத்துமுறை, தீபாராதனை, பிரசாதம் வினியோகம், அன்னதானம் நடக்கிறது. இடம்: பான் பெருமாள் சன்னிதி, பஜார் தெரு, ஹலசூரு, பெங்களூரு.நம்மாழ்வார் ரத உற்சவம்ஸ்ரீமத் நம்மாழ்வார் 143வது பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேரம்: காலை 10:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை: இஸ்கானின் சனாதன பிரபு, கீதா மாதாஜியின் ஹரிநாம சங்கீர்தனம் மற்றும் நியூ பிரபாத் பிராஸ் பேண்ட் குழு வாத்தியத்துடன் நம்மாழ்வார் ரத உற்சவம் திருவீதி உலா.இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு, பெங்களூரு.ஆண்டு திருவிழாகங்கையம்மன் 86ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேரம்: காலை 6:00 மணி: சந்தனகட்டை ஏரியில் கரகம் அடுக்கி மல்லேஸ்வரம் வழியாக வந்து, பாஷ்யம்நகரை அடையும்; காலை 11:00 மணி: பூஜை ஆரம்பம், தீபாராதனை, பிரசாதம் வினியோகம்; மாலை 6:30 மணி: கரக ஊர்வலம், பொய்க்கால் குதிரை, வாண வேடிக்கை, பேண்டு வாத்தியங்களுடன் ஸ்ரீராமபுரம், சுதந்திரநகர், ஹனுமந்தபுரம், ஓக்லிபுரம், ராமசந்திரபுரம், சாய்பாபா நகர், பிரம்மபுரம், தயானந்தநகர், பண்டிரெட்டி சதுக்கம், கவுதமநகர், பாஷ்யம்நகர் வழியாக கோவிலை அடையும்; இரவு 10:00 மணி: தமிழக ஆர்.கே.பேட்டை பாலுவின், பாரதமாதா நாடக மன்றத்தின் நாடகம். இடம்: கங்கையம்மன் கோவில், 3வது குறுக்குத் தெரு, பாஷ்யம்நகர், ஸ்ரீராமபுரம், பெங்களூரு.பஜனை உற்சவம்வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பொதுமருத்துவமனை திறப்புரிச்சர்ட்சன்ஸ் பேஸ் மருத்துவமனையை, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் திறந்து வைக்கிறார். நேரம்: மதியம் 3:00 மணி. இடம்: கன்னுார் - பாகலுார் விமான நிலைய சாலை, கன்னுார், பெங்களூரு.களிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.ஓவிய பயிற்சிஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.இசைமார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.* நாம் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பாலிவுட் நைட் இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: டாய் பாய், மூன்றாவது தளம், லுாலுா குளோபல் மால், மாகடி சாலை, பின்னிபேட், பெங்களூரு.* சூஸ் பார்ட்டி வழங்கும் சுகர் ரஷ் நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.* ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு.காமெடிதி பிளாக் பக் காமெடி வழங்கும் ஜே.பி., நகர் காமெடி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.* புளு பல்ப் கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: பர்கர் மேன், 3282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.* யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.**அனுப்ப வேண்டிய முகவரிஇன்று இனிதாக!தினமலர்19, குயின்ஸ் சாலை, சிவாஜி நகர்,பெங்களூரு - 560052மொபைல் எண்: 73497 54661பகல் 2:00 - 8:00இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்