உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு

பல நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு

எலஹங்கா: விமான கண்காட்சியில் பல நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் இந்தியா தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமான படை தளத்தில், ஏரோ இந்தியா விமான கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது.இந்தியா தரப்பில் உலக அளவில் ராணுவத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பல நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடந்தது. சி.ஐ.எஸ்.சி., எனும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.சி.ஐ.எஸ்.சி., குழுவினர், இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அப்போது, இந்தியா, இஸ்ரேலின் பாதுகாப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. விமான கண்காட்சியில் பங்குபெற்ற இந்திய விமானங்கள் குறித்து இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.அப்போது, ஐரோப்பாவின் எம்.டி.பி.ஏ., அமெரிக்காவின் எல்.3 ஹாரிஸ், ஜெர்மனியின் ஹென்சால்ட் போன்ற பாதுகாப்பு துறையில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் இந்தியா தரப்பில் பேச்சு நடந்தது. இதில் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் விமானம் உருவாக்க தேவைப்படும் உபகரணங்கள் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதுபோன்ற பேச்சு மூலம் இந்திய பாதுகாப்பு படையில் புதுவிதமான கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி