மேலும் செய்திகள்
கன்னடத்தில் பேசி ஜெர்மனி பெண் அசத்தல்
11-Sep-2024
கர்நாடகாவில் 'கன்னடமே உயிர்' என்ற முழக்கம் ஒலித்து வருகிறது. அரசியல் கட்சிகளும் இந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இருந்து வருகின்றன.கன்னடம் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு என்ற நிலை 1982ல் உருவானது. கன்னடம் கட்டாயம் ஆக்கப்பட்டது. குறிப்பாக வேலை வாய்ப்புகளுக்காகவே, கன்னடம் கற்றுத்தரும் மையங்களை அணுக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.நுாற்றுக்கும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் இருந்த தங்கவயலில், ஒருகாலத்தில் கன்னட பள்ளிகளே இல்லாமல் இருந்தது. தமிழரான சாமுவேல், கன்னடத்தை சுயமாக கற்று அறிந்து 'மைசூர் பிரசார சபா' என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 1985ல் தங்கவயலில் கன்னட வகுப்புகள் நடத்த துவக்கினார். இவரின் முயற்சியால் 1986ல் 10 கன்னட வகுப்புகள் கற்றுத்தரும் மையங்கள் உருவாகின. தங்கவயல் முழுதும் பல இடங்களில் கன்னட வகுப்புகள் துவக்கப்பட்டன.இளைஞர்கள் கன்னடம் கற்க வந்தனர். குறிப்பாக மருத்துவ கல்வி, போலீஸ் துறை உட்பட மாநில அரசின் பணிகளில் சேருவதில் ஆசைப்பட்டவர்கள், ஆர்வமாக இருந்தனர்.இந்நிலையில், 1995ல் 30 ஆயிரம் பேருக்கு பிரத்தமா, மத்தியமா, பிரவேஷா என கன்னடத்தின் மூன்று நிலை சான்றிதழ் படிப்புகளை நடத்தினர். இதற்கான கன்னட அடிச்சுவடி பாட நுால்களை, மைசூர் ஹிந்தி பிரசார சபா வழங்கியது.தமிழர் நிறைந்த தங்கவயலில் கன்னடம் கற்றுத் தேர்ந்த சாமுவேலுக்கு, கர்நாடக அரசு விருதுகள் வழங்கி பாராட்டியது. கன்னடம் படித்ததால் பலருக்கும் மாநில அரசின் வேலையும் கிடைத்தது. 1995க்கு பிறகு, தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. கன்னட பள்ளிகள், ஆங்கிலப் பள்ளிகளாக மாறின.தமிழ் பயிற்சி“கன்னடமும் தேவை என்பது அன்றைய காலத்தின் கட்டாயம். அதேபோல தாய் மொழி தமிழும் நமக்கு அவசியம். அன்று கன்னடா கற்பித்தது போல, தமிழருக்கு தமிழைக் கற்றுத்தரும் பணியை துவக்க இருக்கிறோம். தமிழ் தெரியாதவர்கள் கற்பதற்கு ஆர்வமுடன் உள்ளனர்.--சாமுவேல் - நமது நிருபர் -
11-Sep-2024