உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருடு போன பைக் கிடைத்ததால் ஆசிரியர் குஷி

திருடு போன பைக் கிடைத்ததால் ஆசிரியர் குஷி

மைசூரு: போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்காத நிலையிலும், திருட்டு போன பைக் கிடைத்ததால், ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.பொதுவாக பொருட்கள், வாகனங்கள் காணாமல் போனால், போலீஸ் நிலையத்தில் புகார் செய்வது வழக்கம். புகார் அளித்தாலும் அவற்றை கண்டுபிடித்து தருவது கஷ்டம். ஆனால் மைசூரில் புகார் அளிக்காத நிலையிலும், திருட்டு போன பைக்கை போலீசார், உரிமையாளரிடம் சேர்த்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.மைசூரின் சாலுன்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு; ஆசிரியர். 2023ல் இவர், தன் பைக்கை, மானந்தவாடி சாலையில் கடை முன் நிறுத்தி பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் திருட்டு போயிருந்தது. புகார் அளித்தாலும் திரும்ப கிடைப்பது சந்தேகம் என்பதால், போலீசில் அவர் புகார் அளிக்கவில்லை.இந்நிலையில், மைசூரு நகரின் வித்யாரண்யபுரா போலீசார், வாகன திருட்டு தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பல பைக்குகளை மீட்டனர்.பைக்கின் ஆவணங்களை வைத்து விசாரித்தபோது, உரிமையாளர்களின் விபரம் கிடைத்தது. இந்த பைக்குகளில், ஆசிரியர் மஞ்சு பைக்கும் இருந்தது. அவரை நேற்று போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பைக்கை ஒப்படைத்தனர். புகார் அளிக்காமலேயே, தன் பைக் கிடைத்ததால், அவர் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:37

இது ஒரு உலக மகா அதிசயம் என்று தான் கூற வேண்டும். போலீசில் புகார் அளித்தாலும் தொலைந்து போன பொருட்கள் கிடைக்காத இந்த காலத்தில், இப்படி ஒரு நிகழ்வா...?ஆச்சரியம்தான்..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை