உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபர் சுட்டுக்கொலை ஒருவர் பிடிபட்டார்

வாலிபர் சுட்டுக்கொலை ஒருவர் பிடிபட்டார்

புதுடில்லி:மேற்கு டில்லி ரஜோரி கார்டனில், ஹோட்டலில் நடந்த கொலை தொடர்பாக ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமன்ஜுன், 26, என்பவர் கடந்த 18ம் தேதி, மேற்கு டில்லி ரஜோரி கார்டன் 'பர்கர் கிங்' என்ற ஹோட்டலில் தன் தோழியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, ஹோட்டலுக்குள் நுழைந்த இருவர், துப்பாக்கியால் அமனை சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். உடலில், 38 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து அமன்ஜுன் உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், தாதா நீரஜ் பவானா மற்றும் அசோக் பிரதான் ஆகிய இரு கோஷ்டிக்கு இடையே உள்ள பகை காரணமாக அமன் கொல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, ஹரியானா மாநிலம் ரோஹ்தக் நகரைச் சேர்ந்த பிஜேந்தர், 27, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ