உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீதர் கெஸ்காமில் பயங்கர தீ :50 டிரான்ஸ்பார்மர், ஜீப் நாசம்

பீதர் கெஸ்காமில் பயங்கர தீ :50 டிரான்ஸ்பார்மர், ஜீப் நாசம்

பீதர்:பீதர் கெஸ்காம் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50 டிரான்ஸ்பார்மர்கள், ஜீப் முற்றிலும் எரிந்து நாசமானது.பீதர் டவுன் ஜோதி காலனியில் கெஸ்காம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் ஒரு அறையில், பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை சரி செய்யும் வேலை நடக்கிறது. நேற்று காலை அந்த அறையில், ஊழியர்கள் வேலை செய்தனர். அப்போது திடீரென அறைக்குள் இருந்து, புகை வந்தது.சிறிது நேரத்தில் அந்த அறையில் தீப்பிடித்தது. அங்கு வேலை செய்த ஆறு பேர், சுதாரித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். தீ மளமளவென வேகமாக பரவி எரிந்தது. 50 டிரான்ஸ்பார்மர்கள், அறை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ஜீப்பிலும் தீப்பிடித்தது. அந்த ஜீப்பும் எரிந்து நாசமானது. மூன்று வாகனங்களில் தீயணைப்பு படையினர் வந்தும், எந்த பயனும் இல்லை.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை